Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] Re: அக்கரை சீமை அழகினிலே



13 டிசம்பர், 2009 9:27 am அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:
இனி ஒரு முறை அவன் இப்படி பேசினால் நானே காவல்துறைக்கு காட்டிக்
கொடுக்கபோறேன்.

இதில் காட்டி கொடுக்க என்ன இருக்கு...?
அமெரிக்காவை எதிர்த்து பேசுவது தவறா என்ன?

வேறு ஏதேனும் குற்ற செயல் உறவு இருப்பின் தானே தேவை?

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சியை சொல்ல வேண்டும்.

9/11 நிகழ்ந்த காலத்துக்கு பின் நான் ஒரு வேதி தொழில் தொடஙக முனைந்தேன். அதுக்கு என ஒரு இடம் பார்த்து விட்டு வேதிப்பொருட்களை வாங்கினேன். நான் வேறு முழு நேர பணியில் இருந்ததால் ஒரு வேதிப்பொருள் வரும் போது என் சகலர் சென்று இறக்கி வைத்து விட்டு வந்தார்.

அந்த வேதி  நச்சுத்தன்மை கொண்டதால் அதை சிறப்பு முறையில் அடைத்து கொண்டு வருவார்கள். நான் வார இறுதியில் அதை பார்க்க சென்ற போது என் கூடத்தின் கதவில் ஒரு அட்டை செருகி வைக்கபப்ட்டு இருந்தது. அதில் :West Chester Police Detective"  எனற தகவலுடன் துப்பறிஞரின் பெயர் இருந்தது. தன்னை குறிப்பிட்ட தொலைபேசியில் அழைக்குமாறு கோரி இருந்தார். எனக்கு அமெரிக்காவில் வேதி தொழில் தொடங்குவது முதன்முறை என்பதால் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்ததோஎன அச்சம் கலந்த திகைப்புடன் இருந்தேன். நான் அழைத்தபோது என்னை நேரில் சந்திக்க விரும்புவதாக சொல்லி நேரம் குறித்தோம்.


குறித்த நாளனறு அவரை சந்திக்க போகும் போது எனக்கு முன்னமே காத்து இருந்தார். நான் கதவை திறந்ததும் தன்காரில் இருந்து இறங்கி வந்து தன்னை அறிமுகப்படுத்தினார். சில நாட்களுக்குமுன் உனக்கு ஒரு நச்சு வேதிப்பொருள் வந்ததா என கேட்டார். ஆம் என்றேன்

அதை உனக்கு இறக்கிய லாரி ஓட்டுநர், வேதிப்பொருள் நச்சுதன்மை உள்ளதாகவும், நீங்கள் மத்திய கிழக்கு ஆள்போல் தோற்றம் அளிப்பதாகவும் உங்கள் மேல் ஐயம் இருப்பதாக எங்கள் துறைக்கு தொலைபேசி சொன்னார். அதன் தொடர்பாக நான வந்துள்ளேன். நீ அதை எதற்கு பயன்படுத்துகிறாய் என் எனக்கு விளக்க முடியுமா என்றார்.  நான்  அவருக்கு சுற்றி காட்டி, நான் என்ன செய்யபோகிறேன் என்று விளக்கினேன்.

சரி. நீ தவறாக நினைக்காதே. எங்கள் கடமையை நான் செய்கிறேன்.  இந்த 9/11 க்கு பின் எங்கள் பொறுப்பு அதிகமாகி விட்டது. ஆனால் நாங்கள்  எவரையும்  "ப்ரொஃபைல்" செய்யவில்லை என்றார்.

"நீங்கள் அப்படி செய்தாலும் நான் வருந்த மாட்டேன் நீங்கள் இந்த நாட்டை காக்கும் பொறுப்பில்தானே செய்கிறீர்கள்." என்றேன். எனக்கு இருந்த குளிர் சற்று போய் விட்டது.

மேலும் 'தீவிரவாதம் என்பது ஒரு பிரமிட் போல். தீவிர வாதிகள் தீடீரென்று முளைப்பது இல்லை. வெறுப்புள்ள சமூகத்தில் இருந்துதான் தோன்றுகிறான்" என்றேன்.

அதுக்கு அவர் சிரித்துக்கொண்டே "உனக்கு தொழில்வெற்றி பெற வாழ்த்துகள் நு சொல்லி விடை பெற்றார்.


அந்த லாரி ஓட்டுநருக்கு இருக்கும் பொறுப்பு எனக்கு வேண்டும்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment