Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] Re: அக்கரை சீமை அழகினிலே

"உன் வீட்டிக்குள் வர எனக்கு அனுமதி இல்லை"
"வேண்டாம் நீ யார் என்று எனக்கு தெரியாது"
ஏதாவது குடிக்க வேண்டுமா என்றதற்கு ஒன்றும் வேண்டாம் என மறுத்து விட்டாள்

மிக அருமைதானுங்க..

என் அம்மா எங்கே இருக்கிறாள் என்று தெரியலே. எனக்கு போவதற்கு இடமும் இல்லை.
ஆத்தா.. மாரியாத்தா... இ.ஆண்டவன் போல ஆயிட்டாங்களே.. :)

சரி என்று என்னிடம் இருந்த மஞ்சள் பக்கங்களை கொண்டு என் காரின் மீது வைத்தேன். "இதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது" என்றாள்
நல்ல பொது அறிவு.. :(

என் வீட்டில் இருக்கு. ஆனால நான் வீட்டுக்கு போக முடியாது.
அப்புறம் அது எதுக்கோ..?

எங்கு தங்குவாய் என்றேன். " ஈ டோண்ட் நோ" என்று சொல்லிவிட்டு நடை கட்டினாள்.
அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.
சொல்லவதற்க்கு ஒன்றுமில்லே.


இவைகளும் அக்கரை சீமையின் அழகுகளே...

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
"கேரலும் நானும்"

நான் சொல்ல இருக்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் வீட்டுக்கு நான் திரும்பும் போது ஒரு பதின்ம அகவை இளைஞனும் இளைஞியும் என் அண்டை வீட்டு சிறுவன் பீஜீ உடன் (அது என்ன பேரோ)? அவனுக்கு 12 வ்யது  இருக்கும்) பேசிக்கொண்டு இருந்தனர். நான் வீட்டுக்கதவு திறந்தவுடன் என் ஞமலிகள் வெளியே வந்து அவர்களை பார்த்து குலைத்தன. "சட் அப்" என்று பீஜீ கத்தினான். நான் எட்டி பார்த்த போது நாய்கள் அமைதி ஆகி விட்டன. அவர்கள் நாய்களுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்


மாலை மங்கி விட்டதால் நான் விளக்கு ஏறிவிட்டு நாய்களை உள்ளே அழைகக் வெளியே எட்டி பார்த்த போது அந்த இளைஞன் அவளை முத்தம் இட்டுக்கொண்டு இருந்தான். பீஜீ போய் விட்டு இருந்தான். அது ஆங்கில முத்தமா இல்லை தமிழ் முத்தமா என பார்க்க ஆசைப்பட்டாலும் நான் வீட்டின் வெளிச்சத்தில் இருப்பதால் அவர்கள் என்னை பார்த்தால் என்னை தாழ்வாக நினைப்பார்களோ என்று அஞ்சி என் வேலையை பார்க்க போய்விட்டேன்

அந்த வார இறுதியில் இலையுதிர் காலம் ஆனதால் நான் சன் தொலைக்காட்சியில் ஓடும் திரைப்படத்தின் ஒலிவரிசையை செவிக்கருவிகளால் கேட்டுக்கொண்டு இலைகளை வாரிக்கொண்டு இருந்தேன். அப்போது அந்த இளைஞி மிக நாகரிகமாக உடுத்திக்கொண்டு அவ்வழியே நடந்து பீஜி வீட்டுக்கு போனாள். பிஜி வீட்டில் யாரும் இல்லை என்பது எனக்கு தெரியும். ( என் மர இலைகள் அவர்கள் புல் வெளியில் பரவியதை நான் வாரிக்கொண்டு இருந்தேன்) பிஜி இல்லையென அறிந்த  அந்த பெண் திரும்பி என்னிடம் வந்தாள்.

"உங்கள் அலைபேசியை நான் சற்று பயன்படுத்தலாமா?" என்றாள்.
முன்பின் பேசி இராத அவளே கேட்கிறாளே என்று, "சரி இரு" என்று சொல்லி வீட்டுக்குள் இருந்து கொணர்ந்து கொடுத்தேன். அதில் யாருக்கோ ஒரு கால்மணி நேரமாவது உரக்க பேசிக்கொண்டு இருந்தாள் என்பது என் காதில் பொருத்திய கருவியை மீறி என் காதில் விழுந்தது. நான் என் வேலையை செய்துகொண்டு இருந்தேன். பின் பேசுவதை நிறுத்திவிட்டு என்னிடம் அலைபேசியை கொடுத்து விட்டு ஓ என உரக்க அழத் தொடங்கினாள். நான் அதிர்ந்து விட்டேன். ஏன் என்ன ஆயிற்று என்றேன்

" என்னிடம் காசு இல்லை. என் அலைபேசியை நிறுவனம் துண்டித்து விட்டது. என் அம்மா எங்கே இருக்கிறாள் என்று தெரியலே. எனக்கு போவதற்கு இடமும் இல்லை. நான் நாளை கலிஃபோர்ன்யா போக வேண்டும்" என்றாள் கண்களின் நீர் வழியவும் மூக்கை உறுஞ்சிக்கொண்டும்

"சரி அலைபேசி நிறுவனத்தில் பணம் செலுத்தி நிமிடங்களை கூட்டிக்கலாமே?" என்றேன். நானே ஐந்தோ பத்தோ கொடுக்கலாம் என்றுதான்
"என்னிடம் காசு இல்லை" என்று கத்தினாள்.
"சரி, என்னால் முடிந்ததை தருகிறேன்" என்றேன்
"உன்னிடம் தொலைபேசி புத்தகம் இருக்கா?" என்றாள்
"என் கணினியில் பார்க்கலாமே" என்றேன்

"உன் வீட்டிக்குள் வர எனக்கு அனுமதி இல்லை" என்றாள்.

சரி என்று என்னிடம் இருந்த மஞ்சள் பக்கங்களை கொண்டு என் காரின் மீது வைத்தேன். "இதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது" என்றாள்
"அதில் உள்ள சிவப்பு பகக்ங்களில் தேடு" என்றேன். தேடினாள் "கிரிக்கெட்" என்ற நிறுவனத்தை அழைத்தாள். ஆனால அவர்கள் இவளுடைய சமூக காப்பு எண்ணை கேட்டு இருக்கிறார்கள். துண்டித்து விட்டு அவர்களை திட்டினாள். "என்னிடம் சமூக காப்பு எண் இல்லை." அதை கேட்கிறர்கள். "

"இந்த நாட்டில் எல்லோருக்கும் இருக்கே, உனக்கும் இருக்க வேண்டுமே?"

"அது எனக்கு தெரியும். எனக்கு நினைவு இல்லை. என் வீட்டில் இருக்கு. ஆனால நான் வீட்டுக்கு போக முடியாது."  என்றாள்

"அப்படியான்ல் இனி என்ன செய்ய போகிறாய்?"
"எனக்கு தெரியலே.  நான் மிகுந்த பசியோடு இருக்கிறேன்"
"உனக்கு ஒரு பாய் ஃபிரண்டு இருந்தானே அவன் உதவி செய்ய மாட்டானா?"

"அவன் தான் என்னை ஸ்க்ரூ பண்ணி விட்டான். அவன் என் பாய் ஃபிரண்டு அல்ல. வெறும் ஃபிரண்டுதான்" என்றாள்

அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.அவள் பேர் கேரல், தன் பள்ளிக்கூடத்தின் மூலம் கலிபோர்னியாவுக்கு மறுநாள் காம்ப் (நம் ஊர் என் சி.சி போல் என் நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை) போக இருக்கிறாள். ஆனால் கையில் காசு இல்லை. அலைபேசியில்  நிமிடங்கள்  இல்லை. கோடை விடுமுறையில் வேலை பார்த்து இருக்கிறாள். இப்போது இல்லை என்ற தகவலகளை சொன்னாள்.

"சரி உறவினர்கள் இருக்கிறார்களா?"
"ஆமாம் என் கசின்கள் ஃபேர்ஃபீல்டில் இருக்கிறார்கள்"  (அது பக்கத்து ஊர்

"தொலைபேசியில் சொல்லி வந்து கூட்டி செல்லலாமே"
"அவர்களிடம் கார் இல்லை"
" சரி நான் கொண்டு போய் விடட்டுமா?" என்றேன்

"வேண்டாம் நீ யார் என்று எனக்கு தெரியாது"

"நான் இந்த வீட்டில்தான் குடியிருக்கிறேன். ஒன்று செய்யலாம். காவல்துறையினரை அழைத்து அவர்களிடம் சொல்லி சம்மதம் கேட்கிறேன். அல்லது அவர்களே கொண்டு போய் விடலாம் என்றேன்.

இது வரையில் அவள் கத்தியே பேசினாள். நான் "உன் நிலமை எனக்கு புரிகிறது ஆனால் நீ உரக்க பேசாதே" என்றேன்

என்ன நினைத்தாளோ, 'உங்கள் கணினியை நான் பயன்படுத்தலாமா' என்று கேட்டாள். சரி என சொல்லி வீட்டுக்குள் விட்டேன். என் கூகுள் குழும திரையை பார்த்து விட்டு " எனக்கு இந்த எழுத்துகள் புரியலே" என்றாள்.

"அதை மூடி விட்டு மீண்டும் உலாவியை திறந்துகொள்" என்றேன்

கூகுளில் "Cricket. com"  தட்ட அது நம் ஊர் கிரிக்கெட் விளையாட்டு தளத்துக்கு கொண்டு சென்றது. என்ன, உன் கணினி என்னமோ கொடுக்கிறது, என்றாள்.

கூகுளில் தேடு என்றேன். Cricket +  telephone தேடு என்றேன். mycricket. com  க்கு இட்டு சென்றது. பின் அதில் உள்ள எண்களுக்கு தொலை பேசிக்கொண்டு இருந்தாள்.

ஏதாவது குடிக்க வேண்டுமா என்றதற்கு ஒன்றும் வேண்டாம் என மறுத்து விட்டாள்

எனக்கு வெளியில் இலை வாரும் வேலை இருந்தது. ஆனால் என் கணினி அருகில் என் "வாலட்"டை வைத்து இருப்பேன். நான் இல்லாத நேரத்தில் அதில் இருந்து எதையேனும் அவள் சுட்டு விடுவாளோனு ஒரு அச்சம் அதனால் நான் சன் தொலைகாட்சியை பார்த்துட்டு இருந்தேன். அந்த பெண் அந்த நிலைமையிலும் ஒரு நேரம்  ஏதோ பாட்டை முணுமுணுத்தாள். பரவாயில்லையே!

சற்று நேரம் ஆனதால், இருட்டுமுன் முடித்துவிட நான் ஒரு முறை வெளியே போய் என் வேலை பார்த்தேன். அப்போது அந்த பெண் வெளியே வந்து விட்டாள்.

என்ன ஏதேனும் ஆச்சா என கேட்டேன்.
"இல்லை உன்னிடம் ஒரு 10 வெள்ளி அல்லது 20 வெள்ளி இருக்குமா" என்றாள்

இருக்கு இரு வருகிறேன் என்று என்னிடம் 20 வெள்ளிதாள் இருந்ததால் அதை கொடுத்து விட்டு இதை வைத்து என்ன செய்ய போகிறாய் என்றேன்

நான் முதலில் சாப்பிட வேண்டும் என்றாள். எங்கு தங்குவாய் என்றேன். " ஈ டோண்ட் நோ" என்று சொல்லிவிட்டு நடை கட்டினாள்.

மாலை பிஜியின் அம்மா வீடு திரும்பி விட்டார்கள். அவர்வீட்டு கதவை தட்ட  ஜென்னிஃபர் எட்டு பார்த்தார். உங்கள் ம்கன் பிஜியின் நண்பி கேரலொ எதோ இக்கட்டில் இருக்கிறாள். என்று நடந்ததை சொன்னேன்

"அவளை எனக்கு அதிக பழக்கம் இல்லை. அவள் அவளுடைய் பாட்டியின் வீட்டில் இருக்கிறாள் என்று மட்டும் தெரியும். நான் பிஜியை விட்டு அவளைபற்றி அறிய செய்கிறேன்" என்றாள்

கேரல் எப்படி இருந்தாலும் அந்த வயதில் அவளுடைய சில செய்கைகளை நான் நிச்சயம் பாராட்டவேண்டும். அவற்றை சாய்வு எழுத்தில் இட்டுள்ளேன்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்")
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment