Monday, December 21, 2009

[தமிழமுதம்] Re: [Nambikkai] அது ஒரு பொன் மாலைப்பொழுது!

அக்கா நீங்க வந்தது சந்தோஷமாக இருந்தது. நிஜமா ரொம்ப சந்தோஷம். படங்கள் கொஞ்சம் தான் எடுத்திருக்காங்க. நான் முன்னாடி சிக்கிகிட்டதால எதுவும் எடுக்க முடியல.
 
நம்ம நிலா தான் நிகழ்ச்சியின் நாயகன். கலக்கிட்டான். பெருமையா இருந்தது. பெரிய எழுத்தாளராகிட்டான் ;) வாழ்த்துக்கள் நிலா.
 
ஜாப்பர் ஐயா வந்திருந்தது இன்னும் சந்தோஷமா இருந்தது. ஐயா எந்த ஊரில் இருக்காருன்னு தெரியாம நாங்க ரெண்டு பேரும் அழைக்காம விட்டுட்டோம். மன்னிக்கனும் மன்னிக்கனும்..
 
ரமணன் அண்ணா தொகுத்து வழங்கிய விதம் சூப்பர். தேன் போல இருந்தது. ரவி ஐ.பி.எஸ் கச்சிதாமா பேசினார். பிறைசூடன் வல வலா..தேவையில்லாம நிறைய பேசிட்டு இருந்தார்.
 
அடுத்த வருட இலக்கு 200 புத்தகமாம் திரிசக்தி பதிப்பகத்தாருக்கு. நிச்சயம் வெற்றி பெரும்.

2009/12/21 shylaja <shylaja01@gmail.com>
20டிசம்பர் மாலை.
 
முந்தின நாட்களில் பெய்திருந்த மழைகாரணமாக சில்லென்ற காற்று வீச அண்ணாசாலையில்   தேவநேயப்பாவாணர் சிற்றரங்கத்தில் நடந்த திரிசக்தி பிரசுரத்தின் புத்தகவெளியீட்டுவிழாவிற்கு புறப்பட்டேன்.  
 
 முதலில்  5கிலோமீட்டருக்கு சுகமான  வால்வோ பஸ்ஸில் ஏசியை அனுபவித்தபடி எஃப் எம்மில்'  நான் அடிச்சா தாங்க மாட்டே ' கேட்டுக்கொண்டு பயணம். இடையிடையே  கையில் ( உறவினரின் 150அமெரிக்கடாலர்மதிப்புள்ள   வாட்ச்) பெருமையாய் மணிபார்த்தபடி"முன்னாடியே போறோம் எல்லாரையும் பார்த்து பேசிடலாம்" என்ற மனக்கணக்கு!
 
வழியில் கண்டக்டர் இறக்கிவிட்டு'இங்கேருந்து நீங்க சொல்ற இடத்துக்குபோயிடுங்க அந்த வழிபஸ்  போகாது" என  சொல்லவும்  கீழே இறங்கினேன்(அப்போதாவது கவனித்திருக்கலம்)
 
ஸ்ரீரங்கத்திலும் பெங்களூரிலும்  சந்துபொந்தெல்லாம் அத்துப்படி ஆன அளவுக்கு  சென்னையின் பெரிய சாலைகள்கூட எனக்கு இன்னமும் பழக்கமாகவில்லை என்பதை  ஆட்டோக்காரர் அரைகிலோமீட்டருக்கு ஐம்பதுரூபாய்கேட்டபோது தான் நன்கு விளங்கியது!  (அப்போதாவது கவனித்திருக்கலாம்)
 
ஆட்டோக்காரருக்கு  பணத்தைக்கொடுத்துவிட்டு ,
 
அரங்கத்தை ஒட்டிய நூலகத்தில் நுழைந்து  அங்கே  செல்போனில்  கொஞ்சிக்கொண்டிருந்த சின்னப்பெண்ணிடம்,"இங்கயா த்ரிசக்தி விழா நடக்குது?' எனக்கேட்டேன்'  விரலை அவள் உயர்த்திக்காட்டினாள்.அருகே  மாடிக்குச்செல்லும் படிக்கட்டுகளில் திரிசக்தி பானரையும் பார்த்தபடி வேகமாய் ஏறும்போது  சிலர் வரவேற்றனர். மேல்படிக்கட்டில்  இரண்டு துவாரபாலகர்கள்  புன்னகைததும்ப  'ஹை அக்கா 'என்றதும் 'ஹை நிலா ஹை  விழிஸ் 'என்று கைகளைக்கொடுத்தேன்)அப்போதாவது கவனித்திருக்கலாம்)
 
"ரொம்ப மகிழ்ச்சிக்கா நீங்க வந்ததுல.."
 
"பின்ன வராம இருப்பேனா? சென்னைக்கு சொந்தக்காரங்க  மறைவுகாரியத்துக்காக  சடனா வந்தேன்னாலும்  இன்னிக்கு  இந்த ஃபங்கஷன்ல  எப்டியாவது கலந்துட்டு ராத்ரி  ஒன்பதரைபஸ்சைப்பிடிக்க  ஓடிடலாம்னு வந்தேன். ஆமா  யார்லாம் வந்திருக்காங்க?'
எனும்போது  அந்த இடத்தில் ஒளிபாய்ந்தது இசைக்கவிரமணன் பிரசன்னமானார். என்னிடம்."இவங்களை எங்கயோ பாத்தமாதிரி இருக்கே?'[ என்று குறும்பாய் அவர் ஆரம்பிக்க  நிலா சிரிக்க   விழியன் முகம் மலர  மகிழ்ச்சியான அளவலாவல் ஆரம்பமானது(அப்போதாவது கவனித்திருக்கலாம்)
 
ஹரிக்ருஷ்ணன் மதுரபாரதி வெங்கட்சாமிநாதன் என்று  எல்லாரும் வந்தாச்சு.  என்று  தகவல் வந்தது
 
உள்ளே அழகான மெத்தென்ற நீலநிற இருக்கைகள்  கொண்ட  ஏசி அரங்கம்.  மேடையில் திரிசக்தி புத்தகவெளியீட்டுவிழா எனும் பெரிய பானர். அழகான மேடை.திரிசக்தி பத்திரிகைக்குடும்பமும் தேவதை பத்திரிகைக்குடும்பமும் அங்கு சூழ்ந்து  சுறுசுறுப்பாய் இயங்க்கிக்கொண்டிருக்க  அரங்கத்தில் நுழையும் முன்பாக  இனிப்பு காரம்  தேநீர் அருந்திச்செல்லலாம்  என நிலா கருத சரியென்று  சிக்கனமாய் அதே சமயம் மிகச்சுவையாய் இருந்த  இனிப்பு மற்றும் போண்டாக்களைமுழுங்கிவிட்டு  காற்றில் கலைந்த கேசத்தை சரி செய்ய அருகில் இருந்த  லேடீஸ் டாய்லெட்டில் நுழைந்தேன்  கண்ணாடியில் முகம்பார்த்து தலைதிருத்தி வெளியேவந்தேன்(அப்போதாவது பார்த்திருக்கலாம்)\\
 
தேநீரை அருந்தும்போது ஹரியண்ணா  தலையில் பாலுமகேந்திரா தொப்பியுடன்  பாண்ட் ஷர்ட்டில்  பத்துவயது குறைந்தவராய்  என் அருகில் வந்து நின்றபோது அரைக்கணம்  யாரோ என்று அலட்சியமாய்த்தான் இருந்தேன் அடையாளம் தெரிந்ததும்  ஆஹா நீங்களா  என்று அகமகிழ்ந்தேன்! (அப்போதாவது கவனித்திருக்கலாம்)
 
அவர் அருகில்மதுரபாரதி!  ஜாம்பவான்களின் அறிமுகங்கள்  ஹரியண்ணாவிலிருந்து தொடங்கிவிட்டது.
 
தேநீரைக்கோப்பையுடன்  அரங்கத்துக்குள் நுழைந்து முன்வரிசையில் அமர்ந்துள்ள மற்ற ஜாம்பவான்களைப்பார்க்க ஓடிவந்தேன் அப்போதுதான்  கவனித்தேன் இடதுகையில் கடிகாரம் காணாமல்போயிருந்ததை. ஐயோ! அது என் உடமை வேறு இல்லையே! விலை வேறு மிக அதிகமாயிற்றே! படபடப்பாய்  வெளியெ ஓடிவந்து தேடினேன்  காண்பவரிடமெல்லாம் கண்டீர்களா என் வாட்சை எனக்கேட்டுவிட்டேன்..நலமாம்மா என்று அருகே வந்த ராமாவை பதட்டத்தில் அடையாளம்தெரியாமல் முதலில்முழித்து அப்புறம் அட ராமா எனக்கூவி சமாளித்தேன்!
 
விழா அமர்க்களமாய் ஆரம்பமானது.
 
அரங்கம் நிரம்பி  பின்னால்  நிறையபேர் நின்றுகொள்ளவேண்டிவந்தது. திரு அண்ணா கண்ணன்  நின்றுகொண்டிருந்தார்  என்னருகில் ஓர் இருக்கை காலியாக இருக்காவும் அதில் அமரச்சொன்னேன்.கலைஞர் விழாவுக்கு வள்ளுவர்கோட்டத்துக்குப்போகவேண்டியதை  விட்டு இங்கே வந்ததாக சொன்னார்.
 
புஷ்பாதங்கதுரை எனும் ஸ்ரீவேணுகோபாலன்  விக்குவினாயகம் ராம் எழுத்தாளர் இந்துமதி டாக்டர் சுதா சேஷையன் ஐபிஎஸ் ரவி, க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்  நாஞ்சிநாடன் முதுபெரும் எழுத்தாளர் விக்ரமன் என்று  மேடையிலும்  கீழே முதல்வரிசை இருக்கைகளிலும்  பிரமுகர்கள் காணப்பட  அனைவரையும்  தமிழ்த்தாய் வாழ்த்தோடு  வரவேற்று  இனிமையான    தீந்தமிழில்    அறிமுகப்படுத்தி  விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஆரம்பித்தார் திரு ரமணன்.
 
 தமிழ் சிலருக்கு சிநேகிதி  கைகோத்துக்கொண்டு கூடவே வரும்,சிலருக்கு  சிம்மாசனம்!  சிம்மாசனமிட்டு  மனத்தில் அமர்ந்துகொள்ளும் ,சிலருக்கு சக்கரை சமுத்திரம்!  ரமணன் அவர்கள் அந்த  சமுத்திரத்தில் மூழ்கி முத்துக்களாய் அள்ளிவீசிக்கொண்டே இருந்தார்.
 
ஐபிஎஸ் ரவி  அவர்கள் நிலாரசிகனின் யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் கதைத்தொகுப்பைப்பாராட்டி  குறிப்பிட்ட அந்தக்கதையை  விளக்கி  இதை எழுதியவர்  யார் அவரைப்பார்கக்ணும் என மைக்கில் சொல்லி  நிலாரசிகனை  அழைத்து நேருக்குநேர்பாராட்டினார்.
 
அந்தநேரம்  நான் அடைந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளவே இல்லாமல் போனது நிஜம். அதேபோல திரு ஹரிக்ருஷ்ணனையும் அவரது பாரதி பற்றிய நூலான ஓடிப்போனானா? என்ற புத்தகததையும் சிலாகித்துப்பேசினார்.
விழியனுக்கு ஒரு சிறு குழந்தைநட்சத்திரத்தை(பெயர் அஸ்வின் என நினைக்கிறேன்)நிற்கவைத்து அந்த சிறுவர் நூலை சிறப்பித்தனர்.  பொன்னாடை ஒவ்வொருவருக்கும்போர்த்தி படைப்பாளிகளை கௌரவித்தனர்.
 
 வாசிக்கும் பழக்கம் இன்னும் அடியோடு அழியவில்லை என்பதை அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புத்தகங்களை ஆவலோடு வாங்கவந்தவர்களின் ஆர்வம்  தெரிவித்தது.
 
என் பங்கிற்கு சிலபுத்தகங்களை நானும் வாங்கிக்கொண்டு நேரமின்மைகாரணமாயும் கைக்கடிகாரம் தொலைந்துவிட்ட வருத்தத்தினாலும்  சற்று முன்னதாக  வெளியேறிவிட்டேன்.
 
 
 
 
திரு அப்துல் ஜப்பார் வந்திருந்தாராம் அவரையும் இன்னும் பலரையும் பார்க்க இயலாமல் வந்திருக்கிறேன். இழந்தது கைகடிகாரத்தைமட்டுமல்ல என்பதையும்  இப்போது உணர்கிறேன்.
 
27 புத்தகங்களை இருபதே நாளில்  வெளியிட்டு அதற்கு சிறப்பான விழா நடத்திய  த்ரிசக்திபதிப்பகத்தினரை மிகவும் பாராட்டவேண்டும்  த்ரிசக்தி இதழ்  ஆரம்பித்து சில மாதங்களே ஆகிறது ஆயினும் 70000 காப்பிகள்  போகிறதாம்!   உரிமையாளர் திரிசக்தி சுந்தர்ர்ராமன் அவர் மனைவி நளினி சுந்தர்ராமனின்  கோவில்கள்திருப்பணிபற்றி  மிகவும் சிலாகித்துப்பலர் கூட்டத்தில் பேசினார்கள். மேலும் விவரங்களையும்  புகைப்படங்களையும்  நிலாரசிகனும் விழியனும் திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும் தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
 
(எனக்குத்தெரிந்த விவரங்களை எழுதி இருக்கிறேன் ஏதும் தவறு என்றால் விழாவிற்கு வந்தவர்கள் திருத்தவும் நன்றி)

 
 
 
ஷைலஜா

--
இறையடியார்களின் இணைய சத்சங்கம் " நம்பிக்கை"
http://groups.google.co.in/group/nambikkai



--
விழியன்
http://vizhiyan.wordpress.com

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment