2009/12/20 காமேஷ் <kameshcn@gmail.com>
-- சார்ஜா : சார்ஜாவில் டிசம்பர் 18ம் தேதியன்று நடைபெற்ற அமீரகத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் நிகழ்வில் "அண்ணாச்சி அழைக்கிறார்" என்ற குறும்(பு) படம் வெளியிடப்பட்டது. சென்ற மாதம் நடைபெற்ற அமீரகத்தமிழ்ப் பதிவர்களின் கடற்கரை நகர் "கொர்பகான்" சுற்றுலாவை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்து தொகுக்கப் பட்ட இப்படத்தை கீழை ராஸா இயக்கியுள்ளார்.
முகவை முகில், மற்றும் ஊமையன் ஹக்கிம் ஒளிப்பதிவை கவனித்து கொள்ள, இவர்களுடன் ஆசிப் மீரான், சிம்ம பாரதி ஆகிய ஐவர் அடங்கிய பாலைப்பதிவுக் கூடத்தில் இக்காணோளி வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜின்னாஹ் சர்புதீன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் எண்ணம் ஆசாத், பினாத்தல் சுரேஸ், சுல்தான், கிளியனூர் இஸ்மத், குசும்பன், சென்ஷி போன்ற மூத்த பதிவர்கள் உட்பட பட்டிமன்ற பேச்சாளர் ஜெஸீலா, ஹுசைனம்மா, மலிக்கா போன்ற பெண் பதிவர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டது விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். நிகழ்வை ஆசிப்மீரான் தொகுத்து வழங்க, கீழை ராஸா நன்றி உரையாற்றினார்.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3807&Country_name=Gulf&cat=new
~காமேஷ்~
வேட்டைக்காரனுக்கு அடுத்து 'அண்ணாச்சி அழைக்கிறார் ' வசூசில் மாபெரும் சாதனைனு
ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்கே..
'அண்ணாச்சி அழைக்கிறார் ' சில்வர் ஜூப்ளி கொண்டாட வாழ்த்துக்கள்.
<<<<
இயக்கம் நடிப்பு எல்லாம் பார்த்தால்.....வேட்டைக்காரனை மிஞ்சிடும். காமேஷ்..
மகிழ்ச்சி, நல்லமுயற்சி வாழ்த்துகள்..
'அருமையான தலைப்பு":))
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
If you are unable to read Tamil Fonts or to type Tamil...
Please install ekalappai20b_anjal.zip from http://groups.google.com/group/Tamil2Friends/web/ekalappai20b_anjal.zip
For Online Thamizh Typing Use the Link :http://tamil2friends.com/tamil or http://www.google.com/transliterate/indic/Tamil
Website URL : http://Tamil2Friends.com
TamilChat Web URL: https://tamilchatzone.com
ReplyDelete