Wednesday, February 3, 2010

Re: [தமிழமுதம்] ஆயுதம் ஏந்தி மராத்தியத்தைக் காப்போம் - பால் தாக்கரே

 தாக்கரே & கோ வுக்கு பின்னால அமெரிக்காவின் சதி இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு.


~ காமேஷ் ~



2010/2/4 முகமூடி <mask2041@gmail.com>
மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம். யாராவது இந்த உண்மையை சாகடித்தால்
நாங்கள் ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம் என்று சிவசேனா தலைவர் பால்
தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை இந்தியர்களுக்கு சொந்தம் என்று கூறி வருபவர்களை எல்லாம்
பால்தாக்கரே கடுமையாக சாடி வருகிறார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. முதன்முறையாக மும்பை பற்றி
கருத்து தெரிவிக்கையில், மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது
என்று கூறினார். இதற்கு பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். இது
தொடர்பாக பால்தாக்கரே கூறி இருப்பதாவது:

மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம் என்று ராகுல்காந்தி சொல்கிறார்.
ஆனால் இத்தாலி அம்மாவுக்கு மும்பை எப்படி சொந்தமாகும். ராகுல் தனது
கருத்தின் மூலம் மராத்தி மக்களையும், மராட்டியத்தையும் அவமானப்படுத்தி
விட்டார்.

வந்தவர்கள் எல்லாம் தங்குவதற்கு மும்பை ஒன்றும் தர்மசாலை அல்ல.
மராட்டியத்தை காப்பாற்றுவதற்காக 1920 ல் 150 பேர் கொல்லப்பட்டனர். 150
பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க மும்பை எப்படி தர்ம
சாலையாகும்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த கமாண்டோக்கள் தான் மும்பையை காப்பாற்றினார்கள்
என்று ராகுல்காந்தி கூறினார். கமாண்டோக்கள் வரும் முன்பே தீவிரவாதிகளுடன்
போராடி ஹேமந்த் கார்கரே, விஜய் சலாஸ்கர், அசோக் காம்தே, துக்காராம்
ஆகியோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

எனவே மும்பை மராத்தியர்களுக்கே சொந்தம். யாராவது இந்த உண்மையை
சாகடித்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி மராத்தியத்தை காப்போம் என்று
கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=25983

--

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment