உங்களது கருத்து தவறு - ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள் மும்பையில் அடிவாங்கியது என் ? - டாட்டா பிர்லா அம்பானி போன்றோரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். மும்பையில் உள்ள எந்த ஒரு தொழில் அதிபரும் அடி வாங்கவில்லை. அங்கே இருக்கும் டாக்ஸி டிரைவர் தான் அடி வாங்கினார்கள். கீழ் தட்டு மக்களை மட்டுமே குறி வைத்து தாக்கும் கும்பல் தான் இங்கே அரசியல் நடத்துகிறது.
ஹிந்தி தெரியாவிட்டாலும் - தென்னிந்தியர்கள் முன்னேறுவது அவர்களது அறிவு திறனால் மட்டுமே. அதிகமான கம்பனிகளில் - accounts , ஸ்டெனோ, H R - துறைகளில் தென்னிந்தியர்கள் அதிகம் இருப்பார்கள்.
மொழி முக்கியத்தை விட திறமை தான் முக்கியம்.
நான் வேலை பார்த்தது a wellknown Public Limited - Marathi Group Companies - ஆனால் உற்பத்தி துறை, கணக்கு, வரித்துறை மற்றும் கம்பனி சட்ட துறை, அனைத்திற்கும் தலைமையில் நாங்கள் தான் இருந்தோம். எங்களை யார் என்ன சொன்னார்கள். ??
ஹிந்தி தெரியாமலே நான் அவர்களை எப்படி கட்டுப்படுத்த முடிந்தது ?
மொழியால் மட்டும் நாம் முன்னேறிவிட முடியாது - கல்வியும் திறமையும் மட்டுமே நம்மை முன்னேற்றுகிறது.
ஹிந்தி தெரியாமல் வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருக்கா வில்லையா ??
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment