Monday, February 1, 2010

[தமிழமுதம்] Re: கண்ணீர்த் துளிகள்...

விளைச்சல்...

ஒரே ஒரு
விதை விதைத்தான்
கடவுள்...
ஒன்றுக்குப் பத்தாக்கி
பலகோடிகளை
உருவாக்கிச் சிரித்தது
காதல்....
 
 
பெருமிதம் 
 
உன் ஒருத்தியைத்
தவிர வேறொன்று என
நினைத்தாலே
அருவருப்படைகிறது
மனம்....
வியாழனுக்கு மட்டும்
பதிமூன்று நிலவுகளாம்...!?
தனக்கேயான ஒரே
நிலவை எண்ணிப்
பெருமிதம் கொண்டது புவி...
 
 
மகிழ்ச்சி
 
விண்ணில் உண்டான
கருப்புப் பொத்தல் (Black hole)
உள்ளுக்குள் இழுத்து
திடீரென வெடித்துச்
சிரிக்கிறது...
புதிய கிரகங்களாய்...
உன்னைக்
கண்ட நொடிகளில்...
 
 
மணம்..
 
என்
பிணத்திற்குத்தான்
நீ
மாலையிடுவாய் என்றால்
மறுக்கவா போகிறேன்...
 
 
பிச்சை...
 
தன்
சொல் கேட்கக்
கையேந்திப்
பிச்சையெடுக்கிறது
மொழி..
மழலைகள் இதழசைவில்...
 
 
முரண்...
 
உன் மௌனச்
சமாதியை மெள்ளமாய்த்
தீண்டி உன்னுள்
பரிணமிக்க முயல்கிறது
காதல்...
நீயோ காதலை
மூட்டைகட்டி
மௌனத்திற்குள்
புதைத்து
நினைவுநாள் கொண்டாடி
அழகுபார்க்கிறாய்...
 
சிறை...
 
வார்த்தை சிறகு..
மௌனம் வேடன்...
என் வார்த்தைச்
சிறகுகளை
உடைத்து ஊனமாக்கிச்
சிறைக்குள் அடைத்தது
உன் மௌனம்...
 
 
தண்டனை...
 
உன்னில்
சிறகடித்துப் பறந்த
வார்த்தைகளை
ஊனமாக்கியது
என் குற்றம்தான்...
அதற்கான ஆயுள்
தண்டனையாகத்தான்
உன் நினைவுகளைச்
சுமக்கிறது இதயம்...
 
 
முடம்..
 
சமூகத்தின்முன்
நீ
சிறகொடிந்து கிடப்பது
புரிகிறது...
உனக்காகாவே என்
சிறகுகள் இருந்தும்
முடமாகவே வாழ்க்கை...
 
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment