Wednesday, February 3, 2010

Re: [தமிழமுதம்] நியூயார்க்கிலும் கஞ்சித்தொட்டிகள்!

கஞ்சி தொட்டி என்பது அமெரிக்காவில் புட் பேன்ட்ரியில் இருந்து மாறுபட்டது.அமெரிக்க சர்ச்சுகள் பலவும் வாரா வாரம் பேன்ட்ரி எனும் பெயரில் இலவச உணவு அளிப்பார்கள்.வசதி படைத்த குடும்பங்கள் சமைத்து எடுத்து வர அதை சர்ச்சுக்கு வரும் அனைவரும் உண்பார்கள்.ஹோம்லஸ் என்று சொல்லப்படும் ஏழைகளுக்கு உணவு வழங்க வாரம் ஒரு நாள் தனியாக உண்டு.அது அமெரிக்கா ஒரு நாடாக உருவாகிய நாளில் இருந்து தொடரும் நடைமுறை.

நியூயார்க்கில் முன்பிருந்தே ஏழைகள் நிறைய உண்டு.பெருநகரங்களில் இருக்கும் நகர்புற வறுமை நியூயார்க்கிலும் உண்டு.இவர்களில் பலர் சட்டவிரோத குடியேறிகள்.அமெரிக்கர்கள் செய்ய விரும்பாத கட்டிட தொழில்,மாமிச தொழிற்சாலை ஆகிய வேலைகளை செய்பவர்கள்.ரியல் எஸ்டேட் விழுந்ததில் இவர்களில் பலருக்கும் வேலை காலி.ஆக கூடுதலான எண்ணிக்கையில் பேண்ட்ரிக்கு வருகிறார்கள் போல.


2010/2/4 காமேஷ் <kameshcn@gmail.com>
இந்த செய்தி உண்மையா ?
அப்படீனா  அமெரிக்காவில் விரைவில் ஒரு புரட்சி வெடிக்குமா ?


~ காமேஷ் ~




 

நியூயார்க்கிலும் கஞ்சித்தொட்டிகள்!

http://ganeshwrites.blogspot.com/2010/02/blog-post.html

ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பார்பரா வாஸ். சொந்தக்காலில் நின்று தனக்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தவர் வாழ்வில் திடீர் மாற்றம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அன்றாட உணவுக்கே சமூகநல மையங்களை நாட வேண்டிய வந்தது. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களில் பார்பரா வாசும் ஒருவர்.


அவர் உணவுக்காக சென்றுள்ள மையம் அமெரிக்கப் பெருநகரம் நியூயார்க்கில் உள்ளது. அந்த மையம் கிறித்தவ தேவாலயம் ஒன்றால் நடத்தப்படுகிறது. அங்கு இவர் மட்டுமல்ல. இவரைப்போன்று சுமார் 1,250 பேர் உணவுக்காக அடைக்கலம் புகுந்துள்ளனர். உணவுக்காக இந்த அளவு எண்ணிக்கையில் ஒருபோதும் மையத்துக்கு மக்கள் வந்ததில்லை என்று மையத்தின் பொறுப்பாளர் எலிசபெத் மேக்ஸ்வெல் கூறுகிறார்.


இத்தகைய மையங்கள் ஏராளமான எண்ணிக்கையில் நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தங்கள் அன்றாட உணவுக்காக இத்தகைய சமூகநல உணவு மையங்களையே நம்பியுள்ளனர். இவர்களோடு அன்றாட உணவுக்காக பணம் தர முடியாமல் சிரமப்படுபவர்களின் எண்ணிக்கை 33 லட்சமாக உயர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 60 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


நியூயார்க்வாழ் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்த சமூகநல மையத்தில்தான் தனது உணவைப் பெறுகிறது. அவர்களின் எண்ணிக்கையே சுமார் நான்கு லட்சத்தைத் தொடுகிறது. இவ்வாறு சமூகநல மையங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஒருபுறம். வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் உணவுக்காக வருபவர்களை திருப்பி அனுப்புவதும் துவங்கியுள்ளது.


ஏற்கெனவே வரும் மக்களின் எண்ணிக்கையே சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், 2010 ஆம் ஆண்டில் உணவுக்காக அலைமோதும் நியூயார்க்வாசிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்போகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகிலேயே பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவின் பெருநகரமான நியூயார்க்கிலேயே கஞ்சித்தொட்டிகள் திறந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடு என்று சொல்லிக் கொள்வது எவ்வளவு கேலிக்கூத்தான விஷயம் என்பதை உணவுக்காக மக்கள் கூட்டம் அலைமோதுவது நிரூபிக்கிறது.


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment