Monday, February 1, 2010

[தமிழமுதம்] Re: Shwaas - திரை அனுபவம்

நன்றி

On Feb 2, 8:44 am, snegithy snegithy <ragasiya.snegi...@gmail.com>
wrote:
> Nice.. Thanks for Sharing
>
> 2010/1/29 <umana...@gmail.com>
>
>
>
> > Shwaas (Fresh breath) - திரை அனுபவம்
>
> > ஓவ்வொரு நோயும் தீவிரமானது. உண்மையினை சந்தித்து அதனை எதிர்கொள்வதிலே தான்
> > வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கின்றது. சுவாஸ் என்னும் மராத்திய படத்தினை காணும்
> > சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த மாதம் மூன்று தினங்கள் மோர்தானா அணையில் நடந்த
> > திரை இயக்க பயிற்சி பட்டறையில் கிடைத்த உற்சாகத்தில் அதே வாரமே பர்மா பஜாரில்
> > இயக்குனர் சிவக்குமாரின் பரிந்துரையில் சுமார் 80 டி.வி.டிகள் வாங்கி நேரம்
> > கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக்கொண்டு வருகின்றேன்/ வருகின்றோம்.
>
> > கிராமத்தில் வளரும் ஒரு சிறுவனுக்கு கண்ணில் கேன்சர் வந்துவிடுகின்றது. கண்
> > பார்வை சரியாக தெரியவில்லை என்று தாத்தாவும் பேரனும் நகரத்திற்கு வரும் போது
> > தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் அவர்களுக்கு கிடைக்கின்றது. நகரத்திலேயே
> > தங்கி அறுவை சிகிச்சை மூலம் கண்ணை எடுத்து ஊருக்கு திரும்புவதே கதை. மிக
> > எதார்த்தமான கதை. (இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு
> > எடுக்கப்பட்டதாம்). நகரத்தின் மருத்துவனை ஒன்றில் துவங்குகின்றது கதை. டாக்டர்
> > வீட்டிற்கு கிளம்பும் தருவாயில் உள்ளே நுழைகின்றார்கள் தாத்தாவும் பேரனும்.
> > வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளபடியால் கண்டிப்பாக டாக்டரை பார்த்துவிட்டு
> > போகவேண்டும் என அடம் பிடிக்கின்றார். டாக்டரும் சில பரிசோதனைகளை செய்துவிட்டு
> > அந்த ரிப்போர்டை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்கிறார். ரிப்போர்ட்டில் தான்
> > அந்த சிறுவனுக்கு கண்ணில் கேன்சர் இருப்பது தெரியவருகின்றது. கண்கள் இரண்டை
> > எடுத்தால் மட்டுமே சிறுவன் உயிர் பிழைக்க முடியும், இல்லையெனில் அவர் உயிருக்கே
> > ஆபத்தாகிவிடும் என்கின்றார் டாக்டர். தாத்தாவிற்கு மட்டும் சொல்லப்படும் இந்த
> > செய்தியினை மற்றவர்களிடம் இருந்து மறைக்க எவ்வளவோ முயற்சிக்கின்றார். ஒரு சமூக
> > சேவகி இவரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கின்றாள்.
>
> > மேலும் ஒரு சிக்கல் காத்துக்கிடக்கின்றது. உடலில் எந்த பாகத்தை அகற்றும் போது
> > நோயாளிக்கு அந்த செய்தியினை சொல்லிவிட வேண்டுமாம். தாத்தா எப்படி பேரனிடம்
> > சொல்வது என தவிக்கின்றார். மீண்டும் டாக்டரின் உதவியினை சமூக சேவகி மூலம் நாடி
> > பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுவனிடம் விஷயம் சொல்லப்படுகின்றது. அறுவை
> > சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகின்றான். அங்கே அவன் யாருக்கும்
> > அடங்காமல் இருக்கின்றான். டாக்டர் வேறு ஒரு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்ததால்
> > குறிப்பிட்ட தினத்தில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. அறைக்கு
> > வந்ததும் அவன் மேலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தாத்தை அவனை அழைத்துக்கொண்டு
> > வெளியே தப்பித்துவிடுகிறார்.
>
> > மருத்துவமனையே அல்லோல் படுகின்றது. ஒவ்வொரும் பொறுப்பை தான் ஏற்காமல்
> > தட்டிக்கழிக்கும் மனப்போக்கை அழகாக படம் பிடித்துள்ளார். நெருக்கடியில்
> > தவிக்கும் டாக்டர் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றார். மறுநாள்
> > தாத்தாவும் பேரனும் வருகின்றார்கள். டாக்டர், தாத்தாவை வன்மையாக
> > கண்டிக்கின்றார். அதற்கு தாத்தா, இவன் இருட்டிற்கு போகும் முன்னர் இந்த அழுக்கு
> > ஆஸ்பத்திரி காட்சிகளுடன் ஏன் போக வேண்டும், ஏன் இந்த் மருந்து மாத்திரைகள்,
> > வலிகள், காயங்களுடன் இருட்டிற்கு செல்ல வேண்டும், அதனால் தான் அவனுக்கு இந்த
> > வானத்தையும், நகரத்தின் அழகினையும் காட்டினேன். அவன் வண்ண நினைவுகளோடு
> > இருட்டிற்கு செல்லட்டும். தவறு என்றால் மன்னியுங்கள்" என்பார். படத்தின் அழகிய
> > காட்சி.
>
> > தாத்தாவாக நடித்தவர் கனமான பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகின்றார். சமூக
> > சேவகி, உறவினராக வரும் இளைஞர் என எல்லோரும் தங்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு
> > பொறுப்பாக நடித்துள்ளனர். சிறுவனின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. தன்
> > பார்வை மங்குவதை அவன் நடிப்பில் / அவன் காட்டும் எரிச்சரில் நாம் உணர்ந்து
> > கொள்ள முடியும். மருத்துவமனை வாடை அவனுக்கு வெறுப்பை கொடுக்க அவன் சன்னல் வழியே
> > வெளியே காண்டு அடங்குவது கவிதை. தமிழில் சப்டைட்டிலுடன் பார்த்தது ஒரு சுக
> > அனுபவம் தான்.
>
> > இந்த கதை கத்தியின் மேல் நடப்பது போன்ற பயணம், கொஞ்சம் தவறினாலும் ஒரு
> > அழுகாச்சி மெகாசீரியல் தோற்றத்தை பெற்றிருக்கும். மென்மையான இசையும், அற்புதமான
> > கேமரா கை வண்ணமும் மிகச்சிறந்த படைப்பிற்கு வித்திட்டுள்ளது. கிராமத்தில்
> > சிறுவன் செய்யும் சேட்டைகள் நகரத்தில் வளர்ந்தோர் தவறவிட்ட தருணங்கள்.
> > மருத்துவமனைக்கு சென்ற தாத்தாவும்
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment