மேம்போகாக மொழிபெயர்த்தால் இந்த குறளை "யார் என்ன சொன்னாலும் நம்பாமல் அதை ஆராய்ந்து பார்த்து உண்மை எது என படுகிறதோ அதை நம்பணும்" என பொருள் கொள்ளலாம்.ஆனால் கடுகை துலைத்தேழ் கடலை புகுத்திய ஐயனின் குறளை இப்படி லிடரலாக (வார்த்தைகளில் உள்ளபடி) பொருள் கொள்ள இயலும்?
துறவறவியலில் மெய்யுணர்தல் எனும் அதிகாரத்தில் ஐயன் இவ்வாறு கூறுகிறார்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
(357)
விளக்கம்:
என்றும் இருக்கும் மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்துவிட்டால், மீண்டும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.
358ம் குறள் இப்படி கூறுகிறது
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
meaning: உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புகளும் உண்டாகின்றன.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
(356)
விளக்கம்:
பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
(359)
விளக்கம்:
எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.
ஆக துறவறவியலில் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வள்ளூவர் கூறும் மெய்ப்பொருள் என்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.
---------------------------------------------------------------
ஆக வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் என்பது பரம்பொருளே என்பதை அறியலாம்.
423: எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
கையில் பரிமேலழகர் உரை முதலிய நூல்கள் இல்லை.அதில் 423ம் குறளுக்கு மெய்ப்பொருள் என்பது பரம்பொருளே என பரிமேலழகர் கருத்து சொல்கிறார் என்ற நினைவு.அதனால் மேலே சொன்ன விளக்கத்தை மேற்கொண்டு தரவுகள் கிடைக்கும் வரை என் சொந்த கருத்தாக கருதவும்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment