2010/2/2 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
ஜெயமோகனுக்கு ஜே
==============================ருத்ரா
அவரது நூல்கள் கட்டுரைகள்
எல்லாம்
கணயாழியின் காலச்சுவடுகளின்
வரிகளில்
ஊர்ந்து ஊர்ந்து
உழப்பட்டவை.
தமிழ் மொழியில்இனிமையாக
ஆழமாக
நுட்பமாகவும்
இருந்த போதும்
தமிழ் மொழியை
கழற்றிக்கொண்டு ஓடும்
அந்நியமாகவே இருக்கும்.
தமிழ்மீது
பற்று கொண்டிருப்போரின் மீது
தமிழிலேயே காறி உமிழும்.
அதன் கோபம் எல்லாம்
தமிழின் நாத்திக வாதம் மீது தான்.
ஆத்திகத்தமிழர்களையெல்லாம்
நாத்திகத்தமிழர் மீது
கொம்பு கொண்டு மோதி
மூர்க்கமாக
தாக்கவைத்து விடும்.
தமிழ் ஒரு மொழியே அல்ல
என்று
தமிழில் ஆராய்ச்சிக்கட்டுரைகள்
அச்சேற்றிக்கொண்டேயிருக்கும்.
இந்த நாசுக்கு நகாசு வேலையில்
தமிழ் எழுத்துக்களை
புடம் போட்டு
புளி போட்டு விளக்கி
பளிச்சென்று பகட்டு காட்டும்
வேலையே ஜெயமோகனின் வேலை.
தலித்துகளுக்கு திராவிடக்கட்சிகள்
பகை என்று எழுதுவார்.
பழந்தமிழ்ப்பக்திப்பாட்டுகளில்
திராவிடக்கட்சிகள் தமிழை மட்டும்
எடுத்துக்கொள்ளும் போது
இவர் பக்தியை எடுத்துக்கொண்டு
அந்த விபூதியையயும்
நாமத்தையும்
வில் அம்பு ஆக்கிகொள்வார்.
அவர்கள் புறநானூற்று வீரம் பேசினால்
இவர் பீஷ்மரையும் அவர்மீது
போர்த்தியிருக்கும்
யுத்த நிழலை (வடக்கு முகம் நாடகம்)யும்
ஓவியம் ஆக்குவார்.
சங்கத்தமிழ் செய்யுள் பற்றி
ஓவியம் தீட்டினாலும்
அந்த புருசுகள்
கைபர் கணவாய் போலன் கணவாய்
வழியே கொண்டுவரப்பட்ட
வர்ணங்களையும்
சுமந்து கொண்டு தான் இருக்கும்.
தமிழுக்குள்
தமிழ் எதிரிகள் தான்
தமிழர்களை விட
நுட்பமாகவும் ஆழமாகவும்
தமிழில்
ஊடுருவிக்கொண்டிருப்பார்கள்.
அதனால் தானே
ஒரு முன்னூறு நானூறு ஆண்டுகளாய்
தமிழ் நாடு இருட்டில் கிடந்தது.
திருவிளையாடல் புராணத்தில்
ஒரு நாயனார் உண்டு.
வந்திருக்கும் சிவனடியார்
சிவவேடம் போட்டு
கத்தியோடு வந்திருக்கும் கொலையாளி
என்று தெரிந்த போதும்
போட்டிருப்பது "சிவ"வேடம் அல்லவா
என்று
தன் நெஞ்சை திறந்துகாட்டுவார்
அந்த நாயனார்.
தமிழர்களும் அப்படித்தான்
தன்னைக்கொல்லவந்திருப்பவன்
அழகிய தமிழ் எனும் கூரிய
கத்தியாய் இருந்தால் கூட போதும்
தன் இதயத்தையே பிளந்து
தட்டில் வைத்துக்கொடுத்துவிடுவான்.
ஜெயமோகனின்
அந்த தமிழுக்கு
ஓ!தமிழர்களே வாருங்கள்
ஒரு "ஜே" போடுவோம்.
======================================
On Feb 1, 7:01 pm, Lavanya Sundararajan
<lavanya.sundarara...@gmail.com> wrote:> 2010/2/2 ருத்ரா (இ.பரமசிவன்) <epsi...@gmail.com>
> ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் ஊனத்தை பற்றி எழுதியது தவறு தான்.
> ஆனால் அதை ஏன் அப்படி எழுதினார் என்று அவரிடம்(மட்டுமே) கேட்கலாம் அதை
> விடுத்து நாம் பாட்டுக்கு வசை பாடனால் அது எந்த விதத்தில் சரியானது.
> ஜெயமோகன் ஒரு மாபெரும் எழுத்தாளர் தீவிர இலக்கியவாதி என்பதே உண்மை.
> அவர் எழுதிய எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன அவற்றை
> படிக்கலாமே. அவர் தளத்திலும் எப்போதும் எனக்கு கிடைப்பவை நல்ல
> விசயங்களே.
>
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text ->
>
>
> > நீங்கள்
> > சொல்வது ஆச்சரியம் தான்
> > அப்படிஎன்றால்
> > முழு நிலவாய் சுடரும்
> > அற்புதக்கவிஞன் மனுஷ்யபுத்ரனை
> > ஊனம் காட்டி
> > அவர் ஊளையிட்டது என்ன நாகரிகம்?
> > வேண்டாம் இனி.
> > போதும் இந்த காகித யுத்தம்.
>
> > இப்படிக்கு
> > அன்புடன் ருத்ரா
>
> > On Feb 1, 5:07 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > > 1 பிப்ரவரி, 2010 2:54 pm அன்று, ருத்ரா (இ.பரமசிவன்) <epsi...@gmail.com
> > >எழுதியது:
>
> > > > மஞ்சூராரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கின்றது "
>
> > > > சீதாம்மா
>
> > > > மஞ்சூரார் பெற்ற இந்த கிராமிய (அக்கிரஹார)விருதுக்கு
> > > > என் மனமார்ந்த பாராட்டுகள்.
>
> > > > அதோடு அவர் எழுதிய கவிதைக்கும் என் பாராட்டுகள்.
>
> > > ருத்ரா
>
> > > மஞ்சூர்ராசா தங்கமான ஆளுங்க
>
> > > அவருக்கு ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் இவர்களின் மேல் பாசம் அதிகம். அதனால்
> > > நெஞ்சு பொறுக்கலே
>
> > > > வேந்தன் அரசு
> > > > சின்சின்னாட்டி
> > > > (வள்ளுவம் என் சமயம்)
> > > > "உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."- Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
>
> - Show quoted text -
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment