பார்ப்பனர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நாம் கூறவில்லை........
ஆனால், எத்தனை பார்ப்பனர்கள் இன்று பிறப்பால் தேவநாதன் பார்ப்பன சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் குற்றம் புரிகிறான்..........
ஆக ஒருவரின் பிறப்பு அவனை மேன்மைப்படுத்துவமில்லை..தாழ்த்துவமில்லை................என்று ஒப்புக்கொண்டு..............
கருவறைக்குள் அனைவரும் நுழையலாம் பெரும்பான்மையான்வர்கள் என்று வாக்களிப்பார்கள் என்று நம்புகிறீர்களா? செல்வன்..............
5 பிப்ரவரி, 2010 2:58 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
தேவநாதனுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பது நகைசுவை.அவனை தூக்கில் போட்டாலும் யாரும் ஆட்சேபிக்க போவதில்லை.தேவநாதனை வைத்து ஒட்டுமொத்த பூசாரிகளும் அப்படிதான் என கூறுவது தான் என்னாலும் பிறராலும் ஆட்சேபிக்கபட்டது.வைரமுத்து மோசம் என்பதற்காக எல்லா கவிஞர்களும் மோசம் என இங்கே யாரும் கூறவில்லையே?
2010/2/4 நாடோடி <forrookk@gmail.com>//அன்றைய வையாபுரியின்
இன்றைய ஜெயமோகன்களே!திராவகமாக சுடுவது ஏனோ? //
ஆரியம் எல்லாம் ஆறிப்போனது.
ஆரியன் சொன்ன
திராவிடம் மட்டும்
நல்ல கேள்வி நண்பரே.. ஆனா பதில் மட்டும் கிடைக்காது..
வைரமுத்து ஒரு பெண்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூட்டம் கூட்டமாக
கும்மி அடித்த குடிமிகள், தேவநாதனுக்கு ஆதராக இருந்தார்கள் என்பதை
பார்க்கும்போது அவா நீதி அவாளுக்கு!! இதுகளக திருத்தமுடியுமா???
*வைரமுத்தை எனக்கு பிடிக்காது. அந்த செயல் கண்டிக்கப் படவேண்டியதுதான்..
> 2010/2/3 ருத்ரா (இ.பரமசிவன்) <epsi...@gmail.com>
On Feb 4, 6:53 pm, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> மதிப்புக்குரிய நண்பர் ருத்ரா,
>
> சமஸ்கிருதத்தைத் தூற்றுவதாலும், மலையாளத்தை இகழ்வதாலும், ஜெயமோகனைக் கரையான்
> என்பதாலும் தமிழ் இலக்கியம் வளரப் போவதில்லை.
>
> அன்புடன்
> சி. ஜெயபாரதன்.
>
> ++++++++++++++++++++++++++++
>
>
>
>
>
> > செம்மொழி காப்போம்..
> > ================================ருத்ரா
>
> > அன்றைய வையாபுரியின்
> > இன்றைய ஜெயமோகன்களே!
> > ஆரியம் எல்லாம் ஆறிப்போனது.
> > ஆரியன் சொன்ன
> > திராவிடம் மட்டும்
> > திராவகமாக சுடுவது ஏனோ?
>
> > கரையான்களிடமிருந்து
> > தமிழைக்காத்த
> > உத்தம புத்திரர் உ.வே.சா எனும்
> > உயர்ந்தவர் மீது செய்யும்
> > சத்தியம் இதுவே!
> > உன்னைப்போன்ற
> > பொ(ய்)ம்மை அறிவு ஜீவிகள்
> > என்னும்
> > கரையான்களிடமிருந்து
> > செந்தமிழ் காப்போம்.
> > செம்மொழி காப்போம்.
>
> > இமயவரம்பன்
> > வில்லும் அம்பும்
> > விளையும் தெங்கின்
> > பச்சை வளமும்
> > கேரளம் ஆனது.
> > "சேரலாதனை"
> > சேரலா சேரலா என
> > சொல்லிப்ப்பார்த்தால்
> > "கேரளா" ஒலிக்கும்.
> > ஆனால்
> > கட்டுக்கதையின்
> > பரசுராமர்கள்
> > எறிந்த கோடரியே
> > கேரளம் என்று
> > கேடு கெட்ட சரித்திரம் சொல்லி
> > ஊடுருவிவிட்ட
> > உலுத்தர்கள் கூட்டமும்..அதற்கு
> > உடுக்கையடிக்கும்
> > உனது எழுத்துகளும்
> > ஒழியட்டும் தொலையட்டும்
> > ஓங்கு தமிழ் நாட்டில்.
>
> > விப்ர நாராயணனின்
> > விஸ்வரூபமே
> > எல்லாம் விளக்கும்
> > எழுந்திடு தமிழா
> > தெளிந்திடு தமிழா
> > என
> > குடுமிகளின்
> > "குழப்பஸ்தான்" ஒன்றை
> > கூவி விற்கும்
> > எழுத்துவணிகனே!
> > எடுபடாது உந்தன்
> > எட்டுநூலின்
> > எட்டுத்தொகைத் தந்திரம்.
>
> > ஆத்திக வாதம்
> > வடமொழிக்குள்ளே தமிழை
> > சிறை பிடிக்க வந்தது.
> > நாத்திக வாதமோ
> > அந்த சிறை மீட்க வந்தது.
> > மணிப்பவள நடையில்
> > தாயம் உருட்டி
> > தாக்குதல் தந்தது.
>
> > சங்கத்தமிழிலும்
> > இதன் சாயல் இருந்தது.
> > இருப்பினும்
> > சங்கத்தமிழ் அந்தணர்
> > சான்றோர்களாகி
> > செம்மொழி தந்தனர்.
> > வடமொழி கூட
> > இன்தமிழ் நாற்றுகள்
> > ஊன்றியதாலே
> > விளைந்த பயிர்தான்
> > அறிவீரோ!
> > அதையும்
> > பயிராக உயிராக
> > காத்தனர் தமிழர்.
> > இன்றைய அந்தணர்
> > தமிழையே
> > களையாக எண்ணி
> > கடும்பகை காட்டிடும்
> > அரசியல் சூழ்ச்சிகள்
> > ஆயிரம் ஆயிரம்
> > செய்கின்றார்.
> > "பன்னிரு முறைகளும்"..தமிழ்ப்
> > பன்னீர் மொழிகள் தான்.
> > இதை
> > கோவிலில் ஊற்றிக்
> > கும்பிட்டால் என்ன?
> > என்று
> > கேட்டால் கூட
> > தீட்டு என்கிறார்...இத்
> > தீமை களையவே
> > அணி திரள்கின்றோம்.
>
> > ஆத்திகம் என்னும்
> > ஆத்திரம் கொண்டு நம்மை
> > அமிழ்த்திடலாம் என
> > ஆள வந்திடும் கூட்டங்களே!
> > ஆத்திகம் கூட நாத்திகம் தான்
> > நாத்திகம் கூட ஆத்திகம் தான்..என
> > ஓர் சிந்தனைப் படை கொண்டு
> > வென்றிடுவோம்.
>
> > தமிழின் தொன்மை
> > அமிழ்ந்தது அன்று
> > குமரிக்கண்டம்
> > கடலில் மூழ்கி.
> > அதிலும் கூட
> > கிண்டலும் கேலியும்
> > உந்தனுக்கு.
>
> > உப்புக்கண்டம் போட்டுத்தின்ன
> > குமரிக்கண்டம் தானா
> > உனக்கு கிடைத்து.
> > குமரிக்காரன் என்பதால்..நீ
> > தமிழைப்படுகொலை செய்ய
> > பட்டா போட்டுத் தந்தது யார்?
>
> > ஜெயமோகனின்
> > சட்டைப்பைக்குள் இருப்பதா ?..அந்த
> > குமரிக்கண்டம்..தமிழ்
> > குமுறிய கண்டம் !
>
> > கண்ணகி சிலையையும்
> > கடலில் போட
> > சதிகள் செய்தது உன் கூட்டம்.
> > பகவதி அம்மனாய் வந்த
> > பத்தினியின் கொடுந்தீ
> > பற்றிக்கொள்ளட்டும்..உங்கள்
> > சதிகள் மீது.
>
> > "பதிற்றுப்பத்து"ச் சுவடிகள் அங்கே
> > அழகு மலையாள இலக்கியமாய்
> > பழகும் பாங்கை அறிவாயா?
> > சமஸ்கிருதம் எனும்
> > சல்லாத்துணியில்
> > மூடிக்கிடக்கும் அந்த
> > மூங்கை மொழியின்
> > விழிகள் அங்கே திறக்கட்டும்!...தமிழ்
> > விளக்கும் அங்கே சுடரட்டும்.
>
> > கி.மு.மூவாயிரம்
> > ஆண்டுகள் முன்னே
> > "நகரம்" வளர்த்தவன்
> > நமது பாட்டனே!
> > இளக்காரம் வேண்டாம்
> > அது வடமொழிச்சொல் அல்ல.
> > "நகர்" "அசை"என்ற
> > வினைச்சொல் வேரின்
> > தமிழ் ஒளிச்சொல்லே!
> > "நாகரிகம்" என்பதும்
> > நம் மொழிச்சொல்லே!
>
> > "யாரோ..எவனோ
> > உயரே இருப்பவன்"
> > "தேவன்" என்பவன்.
> > அந்த தேவன் கட்டிய நகரமோ
> > என்று வியந்த கூட்டம்
> > அங்கு வழங்கும் மொழியையே
> > "தேவ நாகரி"என்றது.
> > அதன் அடிச்சுவட்டில்... தமிழின்
> > அறி சுவடி இருந்தது.
> > ஆராய்ச்சியாளர்கள்
> > அடித்துச் சொல்லியும்..இவர்களது
> > அடைத்த காதுகள் திறக்கவில்லையே!
>
> > தானே தோன்றியது
> > சம்ஸ்கிருதம் என்றால் அது
> > "ஸ்வயம்பூ பாஷை"
> > என்றல்லவா அழைக்கப்படவேண்டும்.
> > பல மொழி கொண்டு
> > "சமைத்ததாலே"..அது
> > சமஸ்கிருதம் ஆயிற்று.
> > வேத மொழி எனும்
> > வாய் ஒலி வடிவம்
> > தேவ நாகரியில் எழுத்துரு பெற்றது.
> > மூவாயிரம் ஆண்டுக்கும்
> > முன்னே முகிழ்த்தது
> > வேதம் என்றால்
> > மிக மிக
>
> ...
>
> read more »
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment