Wednesday, February 17, 2010

Re: [தமிழமுதம்] Fwd: [பண்புடன்] தமிழில் கிரந்தம் - இராம.கி. அய்யாவின் கட்டுரை

நீங்கள் எடுத்து போட்ட சுட்டிகளை விட விக்கியே பலமடங்கு மேல்:)

2010/2/17 இராச ராச சோழன் <raja.raja.sholan@gmail.com>
வணக்கம் விக்கி அறிவாளி அவர்களே

2010/2/17 செல்வன் <holyape@gmail.com>
கான்ஸ்பிரசி தியரிகளை மட்டுமே படித்தால் அதுதான் உண்மை என நம்ப துவங்கி விடுவோம்.


2010/2/17 இராச ராச சோழன் <raja.raja.sholan@gmail.com>

தோழரே அடிமை புத்தி உள்ளவர்கள் எத்துணை சொன்னாலும் அவர்களது அடிமை மூளை ஏற்றுக் கொள்ளாது
யேர்மனி படை எடுத்து வரப் போகிறது என்று காற்று வாக்கில் செய்தி வந்தவுடன் யேர்மனி மொழி படித்த கழிசடைகளை வரலாற்றை புரட்டி பாருங்கள் தெரியும்....

2010/2/17 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>

---------- Forwarded message ----------
From: ஆசாத் <banuazad@gmail.com>
Date: 2010/2/17
Subject: [பண்புடன்] தமிழில் கிரந்தம் - இராம.கி. அய்யாவின் கட்டுரை
To: பண்புடன் <panbudan@googlegroups.com>


அன்புடையீர்,

அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

*

நன்றி: இராம.கி.அய்யாவுக்கு

http://valavu.blogspot.com/2010/02/blog-post.html

தமிழில் கிரந்தம்

தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை
சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்லுவதில் சலிப்பு
ஏற்பட்டாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது? தூங்குவது
போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித்தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச்
சொல்லி எழுப்ப முடியாது.

1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது அங்கு ஓரெழுத்து
ஓரொலியாகும். Sound of a Nagari character = function of (Shape of the
character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று என்னும்
பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும் போது,
இங்கு ஓரெழுத்துப் பல்லொலியாகும். அந்த எழுத்து நாம் பேசும் மொழியில்
(சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும் பொறுத்து
குறிப்பிட்ட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character =
function of (Shape of the character, the place of occurrence in a
word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப்
பல என்னும் பொருத்தம் கொண்டது. இது பார்ப்பதற்குக் கடினம் போல்
தோற்றினாலும், பழக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லாது குறைந்த
எழுத்துக்களில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறையாகும்.

நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை, தமிழி/தமிழ் போன்ற
கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த
எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள்
புகுத்த நினைக்கிறார்கள். இது நாம் புழங்கும் வட்டத்தைச் சதுரமாக்கும்
முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இப்படி
முயன்று கொண்டிருந்தால் பை என்னும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல்
தெரிந்தவர்கள் இதைச் செய்ய முயலமாட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில்
தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே
கொண்டிருந்தன. அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப்
(சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் தப்பியது தமிழ் மட்டுமே.
அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக
இருக்கிறது. குலைப்பவர்கள் வெறியர்களா? குலையாது காப்பவர்கள் வெறியர்களா?

2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவர்களின் முதல் தாக்குதல் "பொருள்
மாறிப் போய்விடும்" என்பதாகும். "இல்லை ஐயா, பொருள் சற்றும் குறையாமற்
சொல்லத் தமிழ்ச்சொல் இருக்கிறது" என்றால், "அது பழையசொல், பண்டிதத்
தமிழ்" என்று நொள்ளை சொல்லுவார்கள். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள்
உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழில் மட்டும் குறை
கண்டுகொண்டே இருப்பார்கள். இவர்கள் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர்கள்.
மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்" என்று களியாட்டப் புலங்களில்
மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார்கள்.
மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து ஒரு கலப்பின மொழி (bastard language)
உருவாவதையே வேண்டி நிற்கிறார்கள். இவர்களின் விழைவு தமிங்கிலம் தான்.
தமிழ் அல்ல.

3. இவர்களின் இரண்டாவது தாக்குதல் "கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு
மாறிவிடும்" என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாமல்
பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும்
இவர்கள் அங்கலாய்ப்பார்கள். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலலம்பூர்,
சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper
market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார்கள்.
நம்மூர்க்காரர்கள் மூலம் தான் பசார் என்ற சொல்லை அவர்கள்
அறிந்திருக்கிறார்கள் அந்தச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
அதுவும் தென்பாண்டியொலிப்பை அப்படியே காட்டிவிடுகிறது.

பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர்
என்ற சந்தை/அங்காடி ஊரே சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது
பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம்
ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்>பந்தார்>பஞ்சார்>பசார்
என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் என்று ஆனது.
நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும்,
நையாண்டியடிக்கும் இந்தப் பெருகபதிகள் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம்
போய்ச் சொல்லுவது தானே? "அதைப் பசார் என்று எழுதாதீர்கள், பஜார் என்று
எழுதுங்கள்" என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில்
ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர்கள் சற்றும் கவலைப்[படாமல்,
வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்கள்.

Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச்
சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு
நிறுத்திக் கொள்ளுவோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்றுமொழிச் சொற்களைத் தம்
இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார்கள்.
புழங்குகிறார்கள். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை
கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத்
தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்பருக்குத் தம் கருப்பு
வண்ணம் தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப்
போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு மட்டுமே த கருப்பை
மறைப்பதற்கு வெள்ளை, பூஞ்சை என்ற வண்ணங்கள் வண்டி வண்டியாகத் தேவைப்
படுகின்றன. அவை கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார்கள். தோலின்
கருப்பு நிறம் தான் போகமாட்டேன் என்கிறது.]

4. இவர்களின் மூன்றாம் தாக்குதல் "இயற்பெயரில் எப்படிக் கிரந்தம்
தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?" "மற்றவன் இப்படி
நினைக்கிறானா?" என்று இவர்கள் எண்ணுவதே இல்லை. மற்றவருக்குப் பெருமிதம்
இருக்கிறது, எனவே அவர்கள் கவலையே படாமல் தொல்காப்பியனைத்
தோல்காப்பியனாக்குகிறார்கள், அழகப்பனை அலகப்பனாக்குகிறார்கள், ஆறுமுகத்தை
ஆருமுகம் ஆக்குகிறார்கள். நமக்கோ நம்முள் கிடக்கும் அடிமையூற்று இன்னும்
அடங்கவில்லை. கூனிக் குறுகி "பழுப்பு பதவிசில்" (Brown sahib) ஒளிரப்
பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம்
எப்பொழுதுமே நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. நம்முடைய கருப்பு/
பழுப்பு மெய்யில் வெண்பொடி/ பூஞ்சைப் பொடி பூசி நம் நிறத்தை அழித்துக்
கொள்ளத் துடிக்கிறோம்.] [அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவிலோ, மகாதீர்
முகமது என்னும் மாந்தர் மலாய்க்காரர்களுக்கு பெருமிதப் பாடத்தை விடாது
கற்றுக் கொடுத்திருக்கிறார்.அவர்கள் இருப்பதைக் கொண்டு பெருமைப்
படுகிறார்கள். புதுப் பெருமைகளை உருவாக்குகிறார்கள்] நமக்கும்
பெருமிதத்திற்கும் இன்றுங் கூட காத தொலைவு இருக்கிறது. வெட்கித்
தலைகுனிந்து கொண்டே இருக்கிறோம். பூச்சுக்களைத் தேடியலைகிறோம்.

5. இவர்களின் நாலாம் தாக்குதல் "கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக்
கற்பது? நாம் தனிமைப் படுவோமே?" என்பதாகும். "மண்ணாங்கட்டி" என்றே
சொல்லத் தோன்றுகிறது. இப்பொழுது மட்டும் தமிழர் தனிமைப் படாமல்
இருக்கிறோமா என்ன? அதுதான் சென்ற ஆண்டு பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக்
கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா, என்ன? தனித்துத் தானே கிடந்தோம்?
தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்றுதானே
இந்தப் பாழாய்ப்போன உலகம் நினைக்கிறது?

அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக
வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள
வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப்
பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி
ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று
கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம்
கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.

என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் "அடிமையாய்
இருப்பதே சுகம்" என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக்
கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.

"சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ?"

பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment