என்ன உள்ளது என்று அறிய வருபவர்களே அதிகமா இருக்க கூடும். விவாதங்களுக்கு தான் எண்ணற்ற இழைகள் உள்ளனவே. இல்லாவிடினும் துவங்கி விவாதிக்கலாமே.
2010/2/20 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
சொல் சொல்லாய் பூ உதிரும்
(ரிக் வேதம்...நூல் ..1...பாடல் ..3)
============================================ருத்ரா
अश्विना यज्वरीरिषो दरवत्पाणी शुभस पती |
पुरुभुजाचनस्यतम || .....(1)
அஸ்வினா யஜ்வரிரிஷோ த்ரவத்பாணி சுபஸ் பதி
புருபுஜாச்சனஸ்யதம்
अश्विना पुरुदंससा नरा शवीरया धिया |
धिष्ण्या वनतं गिरः ||.....(2)
அஸ்வினா புருதம்ஸஸா நரா சவீரயா
திஷ்ண்யா வனதம் கிரஹ்
दस्रा युवाकवः सुता नासत्या वर्क्तबर्हिषः |
आ यातंरुद्रवर्तनी || ........(3)
தஸ்ரா யுவாகவஹ் ஸுதா நாஸத்யா வர்க்தபர்ஹிஷஹ்
ஆ யாதம்ருத்ரவர்தனீ
इन्द्रा याहि चित्रभानो सुता इमे तवायवः |
अण्वीभिस्तना पूतासः || ......(4)
இந்த்ரா யாஹி சித்ரபானோ சுதா இமே தவாயவஹ்
அண்வீபிஸ்தனா பூதாஸஹ்
इन्द्रा याहि धियेषितो विप्रजूतः सुतावतः |
उप बरह्माणि वाघतः ||.........(5)
இந்த்ரா யாஹி தியேஷிதோ விப்ரஜூதஹ் ஸுதாவதஹ்
உப ப்ராஹ்மணி வாகதஹ்
इन्द्रा याहि तूतुजान उप बरह्माणि हरिवः |
सुते दधिष्वनश्चनः ||.....(6)
இந்த்ரா யாஹி தூதுஜான் உப ப்ராஹ்மணி ஹரிவஹ்
ஸுதே ததிஷ்வனஸ்ச்சனஹ்
ओमासश्चर्षणीध्र्तो विश्वे देवास आ गत |
दाश्वांसो दाशुषः सुतम || ..............(7)
ஓமாஸ்ச்சர்ஷணீத்ரதோ விஸ்வே தேவாஸ் ஆ கத்
தாஸ்வம்ஸோ தாசுஷஹ ஸுதம்
विश्वे देवासो अप्तुरः सुतमा गन्त तूर्णयः |
उस्रा इवस्वसराणि ||...........(8)
விஸ்வே தேவாஸோ அப்துரஹ் சுதமா கந்த தூர்ணயஹ்
உஸ்ரா இவஸ்வஸராணி
--------------------------------------------------------------------------------
குதிரைக்கடவுளர்களே போற்றி!
============================
வேள்வி நடத்தும் குதிரைக்கடவுளர்களே!
வேகக் கால்களில் மகிழ்ச்சியின் மன்னர்கள் நீங்கள்.
மகிழ்ச்சிப்பெருக்கினில் துள்ளி ஓடுங்கள்......1
பல்வகை செயல்திறங்களுடைய குதிரைகளே!
வலுவோடு வேள்வி நடத்தும் தலைவர்களே!
அறிவின் செறிவு உங்களிடம் சுடர்கிறது.
எங்கள் வாழ்த்துரைகளில் மகிழ்வுறுக!........2
செயல்முடிக்கும் வீரர்களே
இதோ சோம ரசம்.
வேள்வி திகு திகு வென்று வளர்ந்து அவிகிறது.
சிவப்புத்தீயே சினமாய் எழுந்து வா.......(3)
பல்கதிர் ஒளி இந்திரனே!
உன் விருப்பம் இதோ சோமரசம் தானே!
அது..உள்ளிருந்து விரலாய் வந்து
தூய உள்ளம் விரித்துக்கேட்கிறது!.......(4)
பல்வண்ணக்கதிரோன்
இந்திரனே வருக!
வேள்விக்குழியே
நீ ஆவென்று வாய்பிளந்து
"ஆவாஹன"த்துக்கு (ஆசைக்கு)
காத்திருக்கின்றாயே
இதோ..அது
சோமரசமாய் உருவாகியிருக்கிறது
விரல்கள் போல் நீண்டு உருவகமாய்
காட்டி நிற்கிறது.
உள் விருப்பு வெளியே
தூய மண்டலமாய் துலங்குகிறது.........(4)
எண்ணத்தின் எழுச்சியாய் வந்த இந்திரனே!
சுதன் எனும் சோமரசவாதியின்
சிந்தனைப் பிரளயமே மந்திரங்கள் என்பது.
வாய் அசைவுகள் சொற்களாய்
புகழ்மழை பொழியட்டும்....அதற்கு
பிரம்மம் கூட இங்கே
கைகட்டி தான் நிற்கிறது.
(ரிக்குகளில் உப ப்ராஹ்மணி என்று
ஒலிப்பதெல்லாம்
பிரம்மாவை குறிக்கவில்லை
அவை சோமம் ஊதும் சோப்புக்குமிழிகள் எனும்
மந்திரங்கள்..மந்திரங்களே..மந்திரங்களே ! ) ...........(5)
இந்திரனே!விரைந்து வருக
மந்திரங்களுடன் அந்த மாயக்குதிரைகளுடன் வருக.
சோமம் பிழிபவனே!...எங்களுக்காக
அந்தக்கிண்ணத்தை நழுவ விடாது பிடித்துக்கொள்.
எங்கள் மகிழ்ச்சிக்கடல் அதில் தான்
நொதித்துக்கொண்டிருக்கிறது........(6)
வளர்ப்பவர்களே!செயல் வீரர்களே!
நின்று நிலைப்பவர்களே !
ஐம்புலன்கள் வழியேஆளும் கடவுளர்களே வருக!
உரியவர்களே!உரியவற்றை பெறுபவர்களே
இதோ கொடுப்பவர்
அதோ சோமம் பிழிபவர் தான்
இந்த மந்திர ஊற்றை பருக வாருங்கள்......(7)
கண்ணுக்குத்தெரிந்த கண்ணுக்குத்தெரியாத
எல்லா கடவுளர்களுமே வாருங்கள்.
உங்கள் உதிரம் எனும் நீர் வார்த்திடுங்கள்.
நாங்கள் தழைக்க.
உங்களுக்கு சோம பானம் இதோ
மந்திர வாக்கியங்களில்
அலை விரித்து நுரை விரித்து
காத்துக்கிடக்கிறது.
கொட்டடிகளுக்குள் வேக வேகமாக
வந்து அடையும் பசுக்கூட்டங்களைப்போல்
விரைந்து வருக!................(8)
சொல் சொல்லாய் பூ உதிரும்.
===========================
ஒவ்வொரு சொல்லும் உதிர்க்கின்ற ரிக் வேதப்பூக்களில்
சிந்தனைக்களஞ்சியங்கள் பொதிந்து கிடக்கின்றன.
அதன்படி இந்த சொற்களைப்பார்க்கலாம்
"த்ரவத்பாணி" (பாடல் 1)
=======================
இதில் "த்ரவத்பாணி" என்ற சொல் வழியே கொஞ்சம் நுழைந்து பார்க்கலாம்.பாணி
என்பது கால்களை உடைய என்ற பொருளைக்குறிக்கும்.ஆனால் சமஸ்கிருதத்தில்
இன்னும் வேறு வேறு பொருள்களையும் குறிக்கும்.எல்லா செவ்விய மொழிகளுக்கும்
இந்த இயல்பு உண்டு தான்.
ஆனால் "சாரங்க பாணி சக்கர பாணி என்றால் சாரங்க வாத்தியத்தை சக்கர
வாத்தியத்தை கையில் ஏந்தியிருப்பவனே என்று பொருள்.ஆனால் "புலிப்பாணி"
என்று வியாக்கிர(புலி)பாதரை அழைக்கிறார்கள்.இங்கே "த்ரவத்"என்றால்
விரைந்து ஓடுவதை குறிக்கும்.பாணி என்பதையும் சேர்த்துக்கொண்டால் விரைந்து
ஓடும் குதிரையை குறிக்கும்.இந்த வேதமொழி மக்கள் (ஆரியர்கள் என்று
அழைத்தால் இங்கு எல்லோருக்குமே அலர்ஜி ஆகி விடுகிறது)வடக்கிலிருந்து
வந்து ஏற்கனவே இங்கு இருக்கும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டு
பழங்குடியினரை(ஆனால் நகர் எனும் தொழில் ஆகுபெயரின் இலக்கணம் தாங்கிய இந்த
நகரம் வாழ் மக்களைப்பற்றி) "ஓட ஓட தெற்கு நோக்கி விரட்டப்பட்ட" என்ற
எகத்தாளத்தோடு தான் "த்ரவிட்" என்று திராவிடர்கள் ஆக்கினார்கள்.
உண்மையில் உங்கள் பெயர்கள்"ஆதி ஆரியர்கள்" என்று தான்
இருக்கவேண்டும்.சிந்தியுங்கள் ஆதித்தமிழின் ஆரியர்களே! இப்படித்தான்
"நாடார் இன மக்கள் "சித்ர பானு" எனும் சூரியனின் வழித்தோன்றல்களாய் தம்மை
"ஆதித்தன்"கள் என அழைத்துக்கொள்கிறார்களோ!
அதே போல் "தேவர்"கள் சமஸ்கிருத தேவர்கள் ஆனார்கள்.அந்த "தேவ(ர்)நாகரி"
எனும் சிந்து வெளியின்
முன்னோடிகளாகவும் இருக்கக்கூடும்.) ஓடுபவர்களின் திசை இப்போது இருக்கும்
திசைக்கு எதிர் திசை என்றால் அது தெற்கு தானே தவிர "த்ரவிட"என்றால்
தெற்கை குறிக்கவில்லை.ஏனெனில் தக்ஷ்ண என்பதே தெற்கை குறிக்கும்.இன்னும்
"தட்சிணா மூர்த்தி" எனும் சிவன் (தென்னாடுடைய சிவன்)சிந்து வெளி
முத்திரையில் காளை
சிவன் மாரியம்மன் போன்ற சித்திரங்களில் காட்சி தருவதை
மறக்கலாகாது."நாத்திகம்" என்றால் வடக்கிலிருந்து வந்த "கடவுள்
வடிவத்துக்கு" எதிர் வடிவம் இந்த சிவ வடிவம் தான்.இதன் ஆழ்ந்த உருவகங்கள்
பொதிந்த கருத்து அவர்களை கவர்ந்து அவர்களுக்கு சம்போ மகா தேவா
ஆயிற்று."மிகவும் பெரியவானாக மூத்தவனாக தோன்றியவனே"என்று தான் அதன்
பொருள்.இப்போது கூட யெதி(YETI) (ABOMINABLE MAN)எனும் அந்த இமயமலை
மனிதன்(பெரிய காலடிகளை உடைய மிக உயரமான சடைகள் அடர்ந்த மனிதன் கூட
அந்த கைலாய சிவனின் மிச்ச சொச்சமாக இருக்கலாம்.சிந்து வெளியின்
அந்த தட்சிணாமூர்த்தியிடம்
தான் பதஞ்சலி (இவருக்கும் ஓட ஓட விரட்டப்படவர் என்று தான்
பொருள்)மற்றும் புலிக்கால் முனியும் (வியாக்ர பாதர்)சிவ
சூத்திரங்கள் நிறையக் கற்றுக்கொண்டனர்.உண்மையான நாத்திகம்.வேத
மொழிக்காரர்களின் தசாவதாரத்தில் "வதம்" செய்யப்படும் அரக்கர்கள்
கண்டிப்பாக சிவ பக்தர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் ரிக் வேதத்தில்
இவர்களின் முக்கிய பாதுகாவலன் "ருத்ரன்"
எனும் சிவ புத்திரன் தான் அல்லது சிவனே தான்.ஒரே இனம் இரு இனமாக மாறி
கலந்து போர் தொடுத்துக்கொண்டனரா இல்லை இரு இனங்களிலிருந்தும்
உள் இனங்கள் இடம் மாறி (விபீஷணர்கள் போல்)இருந்து போர் இட்டனரா
என்பதெல்லாம் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குட்படும் வரலாறுகள் ஆகும்.)
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment