Monday, February 1, 2010

[தமிழமுதம்] மழைக்காதலன் பக்கங்கள்


மறுபடியும்

ஒரு பிரிவு

அதே இடம்

அதே சூழல்

பலமுறை

கண்கள் பனிக்க

வரேன் மாமா

என்று சொல்லிவிட்டு

பேருந்து ஏறி இருக்கிறாய்

அந்த பேருந்து ஓட்டுனர் சிரிக்கிறார்.

எல்லாம் அப்படித்தான் இருக்கிறது

கொஞ்சம் கூட மாறவில்லை.

ஆனால் ஒவ்வொரு

முறையும் நீ கொடுக்கும்

முத்தம் மட்டும் எப்படி

வித்தியாசமாய்???



--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment