Friday, February 19, 2010

[தமிழமுதம்] இது போட்டி கவிதையின் மூலம்

இது போட்டி கவிதையின் மூலம் - கவிதை எழுதுமுன் யோசித்தது - எழுத்து நடையில் பாரதி தாசனின் பாதிப்பு இருக்கும் - மன்னிக்கவும் - மாற்ற முடியாதது -
 
 
கவிதை மறந்திருக்க வில்லன்வந்து நினைவூட்ட
கவிதையின் கற்பனைக்கே சென்னை வந்தடைந்தேன்
உற்றவன் அன்போடு தேடிவந்த போதினிலே
பெற்றவள் பின்னாலே திருத்தணி சென்றாய் !
 
மனதுடன் சேர்ந்து வயிறும் பசியெடுக்க
இனத்தாரின் வீட்டில் இருக்கவும் முடியாமல்
மற்றவன் சங்கருடன் திருத்தணி வந்தடைந்தேன்
பெற்றவர் இல்லாமல் ஊரைநீ சுற்றுகிறாய் !
 
கரித்த என்கண்களுடன் திருத்தணி வந்துன்
சிரித்த முகம்கண்டு கனிந்தஎன் உள்ளம்
மனதில் நுழைந்து குடிலிலும் வந்துன்
இனத்திலும் சேர்பவள் உன்மனைவி என்றது !
--------------------------------------------------------------------------  தொடரும் என் கவிதை
 
ரமேஷை நினைத்து எழுதியது ::
மட்டற்ற இன்பத்தில் குறிப்பறிந்து ஓடிவந்து
தட்டத்தில் இட்லிவைத்த செந்தேனே - என்வாழ்வில்
எட்டாத தூரத்தில் நீவாழ்ந்து வந்தாலும்
சிட்டாக வந்தே மணமுடிப்பேன் பார்.

--
  அன்புடன்
முத்துமணி
 9004259420

   

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment