தமிழ்நாட்டிலும் பதிவுலகிலும் முதன்முறையாக அறிந்து வருகின்றனர்.
கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மன், ருஸ்ஸியன், சம்ஸ்க்ருதம், மலையாளம்,
தமிழ், .. என்று பல மொழிகள் பழுதறக் கற்றவர். கம்பனையும்,
சங்கப்பாடல்கள், ... மொழிபெயர்த்து விருதுகள் அடைந்தவர். பின்னாளில்
ஆனந்தவர்த்தனர் (கி.பி. 820-890) போன்றோர் வட இலக்கிய, இலக்கணங்கள்
கொண்டு விளக்கிய த்வனிக் கோட்பாடு தமிழில் சங்க இலக்கியத்தில் வேர்
கொண்டுள்ளமையைக் காட்டியுள்ளார்.
பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழகம் முழுக்க அறிந்த பெயர் ஆவதற்குக்
கோவையில் செம்மொழி மாநாடு நடத்தும் முதல்வர் கருணாநிதி கொடுத்துள்ள
ஹார்ட் கடித மொழிபெயர்ப்பு ஒரு முக்கியக் காரணம். பேரா. சி. இ. மறைமலை
அவர்களை ஹார்ட் பெர்க்கிலி பல்கலைக்கு அழைத்திருந்த வேளை. இந்தாலஜி
என்னும் பேராசிரியர்கள் அவையில் நான் முதலிலும், பின்தொடர்ந்து நண்பர்
சிலரும் தமிழ் செம்மொழி (Classical Language of India on par with
Sanskrit) என்று எழுதினோம். அதை கேள்விக்குள்ளாக்கி திராவிடவியல்
பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப.
கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார்.
நான் பார்ப்போலா புத்தகம் இந்திய பதிப்பாக குறைந்த விலையில் வரவேண்டும்
என்பதை எதிர்த்தும், 'தமிழ் செம்மொழி அன்று' என்று பேரா. பத்ரிராஜு
கிருஷ்ணமூர்த்தி எனக்குச் சொல்லும் கடிதம் பார்க்க. அதுசமயம் பேரா.
ஹார்ட் அவர்களிடம் சிலமுறை போனில் பேசினேன். ஓராண்டு தொடர்ந்து
உன்னிப்பாய்க் கவனித்துவந்தார் பேரா. ஹார்ட். செந்தமிழின் சாராம்சத்தை
வருகைப் பேராசியர் சி. இ. மறைமலை அவர்களுக்கு எழுதிய கடிதம் தமிழ்
செம்மொழி என்று தில்லி அரசாங்கத்தில் நிறுவ உறுதுணையானது வரலாறு.
இன்றுவரை கன்னடமும், தெலுங்கும் இந்திய நடுவண் அரசால் செம்மொழிகளாய்
அறிவிக்கப்படாமை உற்று நோக்கத்தக்கது. வா. செ. குழந்தைசாமி (அ) Tamil
among the Classical Languages of the World, Chennai, 2005 (ஆ) உலகச்
செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் (2005) நூல்களில் விரிவான
காரணங்களைக் காணலாம்.
Prof. George Hart's famous letter on why Tamil is a Classical Language
and CM M. Karunanidhi's translation:
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
படித்தபின் கருத்துக்களை வழங்க வேண்டுகிறேன்.
நா. கணேசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment