சிறுமியை கொன்றவர்களை தூக்கில் போட வேண்டும்
பதிவு செய்த நாள் 2/4/2010 4:14:48 PM
ஐதராபாத்: சொத்துக்காக சிறுமியை கொடூரமாக கொன்றவர் களை தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சாராய வியாபாரி பிரபாகர் ராவின் மகள் நாக வைஷ்ணவி(9) கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இதையறிந்த பிரபாகர்ராவ் துக்கம் தாங்காமல் மாரடைப்பால் இறந்தார். சொத்து தகராறு காரணமாக பிரபாகர் ராவின் முதல் மனைவியின் சகோதரர் வெங்கட் ராவ் கவுடு என்பவர் கூலிப்படை மூலம் சிறுமியை கொன்றுள்ளார்.
ஐதராபாத்தில் மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திராரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ÔÔஎந்த பாவமும் அறியாத சிறுமி நாக வைஷ்ணவியை குடும்ப தகராறு காரணமாக கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த சம்பவத்தினால் துக்கம் தாளாமல் அவரது தந்தை மரணமடைந்தது அவரது குடும்பத்திற்கு பேரிழப்பாகும். குற்றவாளிகளுக்குசட்டப்படி கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்ÕÕ என்றார்.
சிரஞ்சீவி அஞ்சலி
வைஷ்ணவியை கொன்ற வெங்கட் ராம் கவுடு, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வந்தார். கொலை வழக்கில் சிக்கிய அவரை கட்சியை விட்டு சிரஞ்சீவி நீக்கியுள்ளார். சிறுமி வைஷ்ணவியின் அஸ்தியும் பிரபாகர் ராவின் உடலும் அஞ்சலிக்காக விஜயவாடாவில் வைக்கப்பட்டிருந்தது. சிரஞ்சீவி, சந்திரபாபு நாயுடு உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சிரஞ்சீவி கூறுகையில், ÔÔசிறுமியை கொடூரமாக கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்ÕÕ என்று ஆவேசமாக கூறினார்.
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment