Thursday, January 7, 2010

Re: [தமிழமுதம்] அமெரிக்க அரசு உயர் அதிகாரியாக அரவாணி நியமனம் : ஒபாமா அதிரடி

அமெரிக்க உதவி நிறுவனமான யூஎஸ் எய்டு (USAID) என்னும் நிறுவனத்துக்கு 36 அகவை நிரம்பிய இந்திய வழிதோன்றலும் மருத்துவருமான ராஜேஷ் ஷா என்பவரை தலைவராக ஃஇலலரி நியமித்து உள்ளார்
 
இந்த நிறுவனம் உலகு எங்கும் ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டும் அண்மையில் அதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருந்தது.
 
படைபலத்தோடு மக்களின் அன்பையும் சம்பாதிக்கணும் என்று ஒபாமா அரசு முடிவு செய்துள்ளது
 
ஆனால் பாம்புக்கு பால்வார்க்காமல் இருந்தால் சரி

ஷா அவர்கள் லிண்டா-பில் கேட்ஸ் நிறுவனத்துக்கு பணியாற்றி பெற்ற பட்டறிவை கொணர்வார் என நம்பிக்கை
7 ஜனவரி, 2010 8:39 pm அன்று, jmms <jmmsanthi@gmail.com> எழுதியது:
http://www.tamilvanan.com/

அமெரிக்க அரசு உயர் அதிகாரியாக அரவாணி நியமனம் :  ஒபாமா அதிரடி



amanda-simpson.jpg

மெரிக்காவில் முதல்முறையாக அரசு உயரதிகாரியாக அரவாணி ஒருவரை அதிபர் ஒபாமா நியமித்தார்.

அமெரிக்க அரசின் வர்த்தக துறையில் தொழில்நுட்ப ஆலோசகராக அமண்டா சிம்சன் என்கிற அரவாணியை நியமித்து  அமெரிக்க வரலாற்றில் புதுப் பாதை அமைத்துள்ளார் அதிபர் ஒபாமா. 49 வயதான அமெண்டா சிம்சன் ஆணாக இருந்து பெண்ணாக 1990 ஆம் ஆண்டில் தன்னை மாற்றிக் கொண்டார். அவருக்கு முன்னாள் துணையின் உறவால் பிறந்த 13 வயது மகன் இருக்கிறான்.
அரிசோனா மாநிலத்தில் ரைத்தான் என்ற பகுதியில் இருக்கும் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவர் சிம்சன்.

அரசு உயரதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து அமெண்டா சிம்சன் கூறுகையில், &#8220;இந்த பணி கிடைத்ததில் பெருமை அடைகிறேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி பெருமித மடைகிறேன். என் முன்னால் இருக்கும் சவால்களை சமாளிக்க ஆர்வத்துடன் உழைப்பேன்&#8221; என்கிறார்.

&#8220;அமெரிக்க வரலாற்றில் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் அரவாணியான நான்
என்னைப் போல பல அரவாணிகளை அரசுத் துறைக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன். என்னுடைய பணி நியமனத்தால் என்னைப் போன்ற பலருக்கும் புது நம்பிக்கைப் பிறக்கும் என நம்புகிறேன்&#8221; என்றும் அவர் கூறியிருக்கிறார்.



--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

No comments:

Post a Comment