Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி

நம்புகிறோம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!
 
-இரா.சரவணன்.

2010/2/1 jmms <jmmsanthi@gmail.com>

லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி

லஞ்சம் கேட்டா என்கிட்ட சொல்லுங்க! – சென்னை கமிஷனர் அதிரடி

வாகன சோதனை என்ற பெயரில், அல்லது புகார் கொடுக்கச் செஸ்ஸும் இடங்களில் போலீசார் யாரேனும் லஞ்சம் கேட்டால் என்னிடம் விவரம் சொல்லுங்கள், புகார் சொல்லுங்கள். அதற்காக எனது மொபைல் நம்பரும் தருகிறேன்" என்கிறார் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராஜேந்திரன்.

அவர் இன்று நிருபர்களிடம் கூறியது:

சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் வேட்டையில், போக்குவரத்து போலீசார் சிக்கியுள்ளது குறித்த அறிக்கை, இன்னும் எனக்கு வரவில்லை. லஞ்சம் என்பது சமுதாயக் குற்றம். பொதுமக்கள் கொடுப்பதால்தான், போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். பிச்சைக்காரனிடம் பத்து முறை பணம் இல்லை எனத் தெரிவித்தால், அவன் மீண்டும் வரமாட்டான்.

அதேபோல, லஞ்சம் கேட்கும் போலீசாரிடமும் பணம் இல்லை என திரும்பத் திரும்ப கூறுங்கள். லஞ்சம் கொடுக்காவிட்டால், வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் கூறினால், எனது மொபைல் எண்ணில் புகார் செய்யுங்கள்.

எனது மொபைல் நம்பரை இதற்காகவே பொதுமக்களுக்குத் தருகிறேன்: 98409 83832

லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதி மீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து, கூடுதல் கமிஷனரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்க உள்ளேன்.

போலீஸ் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது உள்ள போலீசார் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், நன்றாக இருக்கும்", என்றார்.



--
சாந்தி

No good  or  bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment