Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] வேட்டைக்காரனும், தமிழ்ப் படமும்!!!

 நன்றி தமிழ்பயணீ!!!

நண்பர்களுக்கு இன்னொரு பாடலின் வரிகள்..

பாடல்: பச்சை, மஞ்சள், யெல்லோ தமிழன்
பாடியவர்கள்: முகேஷ் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர்: சந்த்ரு


சுனாமியின்  பினாமியே

குள்ளநரிகளை ஒழிக்கும்  நல்ல நரியே

கண்ணுக்கழியாத கவர்ச்சிக் கண்ணனே!!!

ஏழைகளை ஏற்றிவிடும்  லிஃப்ட்டே

நீ உக்காந்தா  எழுந்திருக்கும் எழுச்சி  நாயகன்

ஓரப்பனுக்கு பிறந்த ஆம்பளை!!!

 

பச்சைஐஐஐஐஐஐ.... பச்சை மஞ்சள் கருப்புத்  தமிழன் நான்...

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நாந்தான்

அட, என்னை மிஞ்ச  எவனும் இங்கில்லை..

நம்ம தாய்குலத்துக்கு  நாந்தான் செல்லப் பிள்ளை

ஆமா ராசா!!!

2011 நம்ம கையில

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில

எமனுக்கும்  என்னைக் கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்

என்பார்வை பட்டாலே  சிங்கமும் பதுங்கும்

பச்சைஐஐஐஐஐஐ.... பச்சை யெல்லோ பிங்க் தமிழன் நான்...

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நாந்தான்

அட, என்னை மிஞ்ச  எவனும் இங்கில்லை..

நம்ம தாய்குலத்துக்கு  நாந்தான் செல்லப் பிள்ளை

உலகத்துக்கு தலைவன் நீ!!!

ஒபாமாவை இழுத்து  வந்த இறைவன் நீ!!!

நீ எட்டு வெச்சா பூமியெல்லாம் கிடுகிடுக்கும்

உன்னைப் பாக்கும் போது பெண்ணிதயம் படபடக்கும்!!! 

 

தயிர்ல போட்டா தயிர்வடை, போடலைன்னா மெதுவடை

ஓட்டை இருந்தாலே  அது ஓட்டைவடை!!

(இவ்ளோ தத்துவம்  தாங்காதுண்ணா, நீ பில்டப்பை  ஏத்து)

தனியாளா சிகரத்தை தொட்டேன், சரித்திரமா உயர்ந்துபுட்டேன்

தலையும் நாந்தானே, தளபதி நாந்தான்

அகில உலக சூப்பர்ஸ்டார்  யாரு???

வேறா யாரு நாந்தானே பாரு!!!

என்னை வாழ்த்திப் பாரு, வாழ்க்கை சிறக்கும்

வணங்கிப் பாரு, மோட்சம் கிடைக்கும்

பச்சைஐஐஐஐஐஐ.... பச்சை மஞ்ச வைட் ரோஸ் தமிழன் நான்...

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நாந்தான்

அட, என்னை மிஞ்ச  எவனும் இங்கில்லை..

நம்ம தாய்குலத்துக்கு  நாந்தான் செல்லப் பிள்ளை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற

இந்த நாட்டிலுள்ள  ஏழைகளின் வாழ்வு முன்னேற!!! 

 

ஏஞ்சலீனா ஜோலியவே  ஏங்க வெச்ச அழகன் நான்

கல்லூரிப் பொண்ணுங்களுக்கு  கனவு கண்ண்ந்தான்

ஆஸ்காரு எல்லாம்  எனக்கு அம்பாசிடர் காருடா!!

ஸ்லம்டாக் கூட  எனக்கு சப்ப மேட்டருடா!!!

உன் புள்ளைக்குதான் எம்பேரை வெச்சுப் பாரு

பரிட்சையில் எடுப்பாண்டா  நூத்துக்கு நுறு!!!

தலைவன் தலைவன், நாந்தான் தலைவன்

தமிழன் தமிழன், நாந்தான் தமிழன்

பச்சைஐஐஐஐஐஐ.... பச்சை மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்...

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நாந்தான்

அட, என்னை மிஞ்ச  எவனும் இங்கில்லை..

நம்ம தாய்குலத்துக்கு நாந்தான் செல்லப் பிள்ளை

2011 நம்ம கையில

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில

எமனுக்கும்  என்னைக் கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்

என்பார்வை பட்டாலே  சிங்கமும் பதுங்கும்


மச்சான்.... எல்லா  கலரும் தமிழன் நான்...

உலகத்தை ரட்சிக்க வந்த கடவுளும் நாந்தான்

அட, என்னை மிஞ்ச எவனும் இங்கில்லை..

நம்ம தாய்குலத்துக்கு  நாந்தான் செல்லப் பிள்ளை

 


--
நரேஷ்
www.nareshin.wordpress.com

No comments:

Post a Comment