Saturday, January 30, 2010

[தமிழமுதம்] Re: தமிழ்ப் பட(ங்களின்)த்தின் அராஜகம்....

சினிமாவுக்கு ஒரு இனிமா
===================================ருத்ரா


சினிமாவைகொண்டே
சினிமாவை மண்டையில் அடிக்கும்
இந்த உத்தி
உணமையிலேயே
"உசத்தி கண்ணா உசத்தி உசத்தி"
ஏற்கனவே நிறைய படங்கள்
வந்திருக்கு.
ஆனா..இதுல ஒரு எச்சரிக்கை அம்சம்
என்னெவென்றால்
எப்படியாவது
லோ பட்ஜெட்காரர்கள்
ஹை பட்ஜெட் சாம்ராஜ்யத்துக்குள்
நுழைய இப்படி
கல்லா கட்டுவது வழக்கம் தான்.
இருப்பினும்
இந்த பஞ்ச் டையலாக் யுகத்துக்கு
இப்படி யொரு
சவபெட்டி தயார் செய்ய வேண்டியது தான்.
படத்தை பார்க்கவேண்டும்
என்ற‌ ஆவ‌ல் அதிக‌ரிக்க‌த்தான் செய்கிற‌து.
க‌ண்ணாடிக்குள் ஒரு க‌ண்ணாடியை காட்டினால்
எப்ப‌டியிருக்கும்?
சினிமாவுக்குள் சினிமா...
அந்த‌ சினிமாவுக்குள்ளும் சினிமா..
பிம்ப‌த்துள் பிம்ப‌ம் என்று
ப‌ய‌ண‌ம் செய்தால்
ப‌ழைய‌ "ஜீவித‌ நௌக்கா" வே
சிற‌ந்த‌ ப‌ட‌ம் என‌ அங்கீரித்து விட‌லாம்.
தொழில் நுட்ப‌ம் அனிமேஷ‌ன் என்று போனால்
ப‌ல்லி ஓணான் போன்ற‌
த‌லைய‌மைப்புக்கார‌ர்க‌ள்
சி++ லேங்குவேஜும் ஆர‌க்கிளும்
அத்துப‌டியாக்கிக்கொண்டு
விர‌ல் ந‌க‌த்திலேயே டேப்ல‌ட் க‌ம்பியூட்ட‌ரையும்
செல்ஃபோனையும் வைத்துக்கொண்டு
வில் அம்புக‌ளையும்
கோவ‌ண‌த்தையும் விட‌மாட்டார்க‌ள்.
அப்போதும்
க‌ல்லா காட்டுவ‌தே க‌ன‌மான குறிக்கோள்.
இருப்பினும்
இந்த‌ப்ப‌ட‌த்தின் மூலம்
நாம் ஒரு "குவாண்ட‌ம் டெலிபோர்டேஷ‌ன்" மூலம்
ஏதாவ‌து ஒரு கால‌க்ஸியின் ஏதாவ‌து ஒரு
"கோள்" (பூமி)யின்
ஹோலோ டெக் சென்று தாவி விடுவோம்.
என்ன‌செய்வ‌து!
ந‌ம் த‌லையெழுத்து
அங்கேயும் எந்திரன் என்ற
ஒரு ரோபோட் க‌ம் ஏலிய‌ன் (பெய‌ர் குஜினி)
ப‌ஞ்ச் டைய‌லாக்கை பிம்ப்ஸா மொழியில்
(அது தான் ஏலிய‌ன் மொழி)
பின்னி பெட‌லெடுத்துக்கொண்டிருக்க‌லாம்.
பார்க்க‌லாம்.
அச‌த்த‌ப்போவ‌து யாரு?
அச‌ர‌ப்போவ‌து யாரு?

============================================ருத்ரா

On Jan 30, 7:54 pm, Naresh Kumar <meetn...@gmail.com> wrote:
> //படத்த பார்த்துட்டியா நீ??
>
> ம்... நானும் ஊருக்கு வந்து தான் பார்க்கணும்.. :(//
>
> பாரு, ஆனா நல்லா கூட்டமா இருக்கறப்ப பாரு. அப்பதான் இன்னும் நல்லாயிருக்கும்!!!
>
> --
> நரேஷ்www.nareshin.wordpress.com

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment