Thursday, January 7, 2010

Re: [தமிழமுதம்] ஐயாமார்களே! அம்மாமார்களே!

வாங்க வில்லன்.. சவுக்கியமா...? 

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

2010/1/7 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>
இந்தக் குழுமத்தை நடத்துற ஐயாமார்களே! அம்மாமார்களே!

என் பெயரு,வயசு,இருக்குற ஊரு,பண்ணுற வேலை எதையும் சொல்ல மாட்டேனுங்கோ!
அப்பா அம்மா நல்ல பேராத் தான் ஜோசியர் கிட்டே கேட்டு வச்சாங்கோ! ஆனா,
கொஞ்ச நாளா எனக்கு நான் வச்சிட்டிருக்கிற பேரு சேட்டைக்காரனுங்கோ!

என்னையும் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டீங்களா? ரொம்ப சந்தோஷமாயிருக்கு!
எனக்கு பேட்டிங்,பௌலிங்,ஃபீல்டிங் ஒண்ணும் தெரியாதுங்கோ! அதுனாலே நான்
ட்ரிங்க்ஸ் ட்ராலி தள்ளிக்கிட்டு வர்றேன்.அப்பத்தானே ஓசியிலே ரெண்டு
பெப்சி குடிக்கலாம்.

ஆனா, ஒரு கண்டிசன்..என்னை மாடரேசனிலேயே வச்சிருங்கோ!

என்னை சேர்த்துக்கிட்டதுனாலே நீங்க தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொண்டு
ஆற்றியிருக்கீங்கன்னு, இன்னிலேருந்து 9,98,87,76,65,543 வருடங்கள்
கழிச்சு உங்க பேரை கல்வெட்டுலே எழுதுவாங்க! உங்க தொண்டு வாழ்க!

நான் யாரையும் திட்ட மாட்டேன்; ஆனா, என்னை யார் வேண்ணாத் திட்டலாம்.
அமாவாசை தவிர மற்ற நாட்களில் கவிதையெழுத மாட்டேன்;(அடுத்த அமாவாசை
எப்போன்னு எனக்கே தெரியாது!)
என் எழுத்தைப் பிடிக்காதவனை வாய்க்கு வந்தபடி வைய மாட்டேன். உண்மையிலே
அவங்களைத் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
கருணாநிதி,ஜெயலலிதா,விஜயகாந்த் யாரையும் ஏச மாட்டேன். விஜய்,அஜித்தைக்
கிண்டல் ப்ண்ண மாட்டேன்.

குழுமத்திலே இருக்கிற பொண்ணுங்களுக்கு லவ்ஸ் வுட மாட்டேன்.(என்னமோ
பாவனாவும்,த்ரிஷாவும்,ச்ரேயாவும் தமிழ்க்குழுமங்களிலே இருக்கிறா
மாதிரி...! தப்பித்தவறி ஒண்ணு ரெண்டு பொண்ணுங்க இருந்தாலும்
வி.ஆர்.எஸ்.வாங்குனவங்களா இருக்கப்போறாங்க!)

யாராச்சும் திட்டினாக் கூட திருப்பித்திட்ட மாட்டேன்; துடைச்சுக்கிட்டு
போயிக்கினே இருப்பேன். சூடு,மானம், வெக்கம்,சொரணையெல்லாம் எனக்குக்
கிடையாதுங்கோ! அதையெல்லாம் உங்க குழுமத்திலே யாராச்சும்
மொத்தமாவோ,சில்லறையாவோ விக்குறாங்கன்னா அவங்க பக்கம் தலைவச்சிக்கூட
படுக்க மாட்டேனுங்கோ!
அடிதடி,வெட்டுக்குத்து,ஏகவசனம்,இடக்கு,மடக்கு,சொடக்கு எதுவுமே
தெரியாதுங்கோ!

கொஞ்ச நாளைக்கு வலைப்பதிவெல்லாம் போட்டேனுங்கோ! ஆனா, ஒரு பதிவுகூட
போடலீங்கோ! ஹி..ஹி...ஹி! எனக்கு வாழ்க்கைத்தத்துவம் ரொம்பப்
பிடிக்குமுங்கோ!

நம்ம வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரிங்கோ! எப்படீன்னு கேட்கறீங்களா? ஒரு
பென்சில் வாங்கிட்டு வந்து யோசிச்சுச் சொல்றேன்.

சேட்டைக்காரன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

No comments:

Post a Comment