Sunday, January 3, 2010

[தமிழமுதம்] Re: தமிழர் பிணத்தின் மேல் மாநாடு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தமிழ் வளர்சிக்கா? தமிழினத் தலைவர் விளம்பரத்திற்கா?

 

«      தமிழ்நாடில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கலவி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

«     தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது.

«     ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழில் படிக்க வழியில்லை.

«     தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை. அதிலும் தமிழில் பேச, தருக்கமிட முடியாது.

«     தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை.

«     தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது.

«     வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை.

 

இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.

 

தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்தில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.

 

தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.

 

செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.

 

ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.

 

தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.

 

மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.

 

இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.

 

அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.

 

ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது

 

 

நன்றி :விடுதலை முழக்கம்






3 ஜனவரி, 2010 7:35 pm அன்று, Illa Rock <illa_r@yahoo.com> எழுதியது:
கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழ் தமிழ் எனப் பேசி தமிழ் வியாபாரம் செய்து பல்வேறு பட்டங்களையெல்லாம் பெற்றுக் கொண்டு தமிழை விற்று ஈட்டிய பொருளாதார தன்னிறைவால், உலகப்பணக்காரர்களின் பட்டியலில் தம்பெயரை இணைத்துக் கொண்ட முத்தமிழறிஞரின் குடும்பங்கள் கோவை மாநாட்டில் படங்களாகத் தெரியப்போகிறது. கோவை மாநகரமெங்கும் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. தமிழறிஞர்களும், தமிழாய்வாளர்களும், தமிழியக்கவாதிகளும், மொழியாளுமை குறித்தும், இனப் பண்பாடு குறித்தும், மொழி வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்வதற்குப் பதிலாக கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, தென்னாட்டுச் சிங்கம் அண்ணன் அழகிரி வாழ்க, தமிழுக்கு அரணமைத்த கனிமொழி வாழ்க போன்ற முழக்கங்களால் கோவை மாநகரமே அதிரப்போகிறது.
தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் அது கருணாநிதியின் சுயலாபத்திற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தி.மு.க.வின் வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும். தி.மு.க.வில் தற்போது பொறுப்பிலிருக்கும் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களுக்கு போராட்டம், சிறைச்சாலை, அடக்குமுறை, இனவரலாறு மொழிப்பற்று தமிழ் தேசியக் கொள்கை என எதுவுமே கிடையாது. இவைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. ஆக, மொழி தேசியத்தையும், இனமான அடையாளத்தையும், சொந்த மண்ணிலே குழி தோண்டி புதைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. ஆனால் தம்மைத் தவிர வேறெவரும் தமிழினத் தலைவர் பட்டத்தை பறித்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு அவரின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். சொந்த வீட்டில் ஒரு சாவு நிகழும்போது, குறைந்தபட்சம் ஓராண்டிற்காவது அந்த வீடுகளில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பதென்பது இயல்பான நடைமுறைகளில் ஒன்று. ஆனால் கடந்த மே மாதம் சற்றேறக்குறைய 80,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இழவு வீடாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் மாநாடு என்னும் கொண்டாட்டத்தை நடத்தத் திட்டமிட்ட கருணாநிதியின் ஈரமற்ற மனநிலையை அவர்தாமே போட்டுடைத்து விட்டார். குடும்ப அரசியலே அவரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஈழ விடுதலைக்கானப் போர் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது ஒரு தலை சிறந்த தமிழியக்கம், இனமான அடையாளத்தை உயிர் மூச்சாய்க் கொண்டு எந்நிலையிலும், தம்மை சமரசப்படுத்திக் கொள்ளாமல் ஆற்றலோடு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளை பன்னாட்டுப் படைகளின் துணையோடு அழித்தொழிக்க முனைந்த இந்திய பார்ப்பனிய வல்லாதிக்க அரசை தட்டிக் கேட்பதற்கு பதிலாக, டெல்லியில் போய் அமர்ந்து கொண்டு மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் பதவி கேட்ட கருணாநிதி, மூன்று லட்சம் மக்களை முள்வேலி வதைமுகாமில் அடைத்து வைத்து, ஒவ்வொரு நாளும் பலபேரை சுட்டுக்கொன்று சுகம் தேடும் இனவெறியன் ராஜபக்சேவின் விருந்தாளியாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த கருணாநிதி, இந்த மாநாட்டை நடத்துவதுகூட தம்மை புறந்தள்ளிய உலகத் தமிழர்களிடம் மீண்டுமாய் தம்மை நிலை நிறுத்துக் கொள்ளத்தானேத் தவிர, இதிலே தமிழோ, தமிழ்ச் சார்ந்த உணர்வோ சிறிதும் இல்லை. ஒருவேளை அப்படி இருந்திருக்குமேயானால், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த நிலையிலும் பயிற்சி மொழியாக தமிழ்மொழி களம் காணாத நிலைதான் இருக்கிறது என்பதையும், தி.மு.க. ஆட்சியிலே தான் ஆங்கில மோகத்தை பெருமளவில் வளர்த்தார்கள் என்பதையும் இவர்களே மழலை மனங்களில் ஆங்கில சிந்தனையை தோற்றுவித்தார்கள் என்பதையும் மறுத்துரைக்க முடியுமா?
இவ்வளவு தமிழுணர்வு மிக்க கருணாநிதி தான் உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்து அது கைகூடாத நிலையில், அதை செம்மொழி மாநாடு என தடம்மாறி அறிவித்தார். அதற்குக் காரணம், ஆசிய நாடுகள் ஆய்வு மையத்தின் தலைவர் ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கொரஷிமா கருணாநிதியின் பித்தலாட்ட அரசியலுக்கு இணங்காமல் ஒதுங்கியது தான் கருணாநிதி 15 ஆண்டுகாலமாக முதல்வராக இருந்தவர். உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்குக் காலம், இடம் போன்றவற்றை தேர்வு செய்யும் பொறுப்பு நொபுரு கொராஷிமாவுக்கு மட்டும்தான் உண்டு என்பது அவருக்குத் தெரியாதா? ஆனால் அவர் கோவை என திட்டமிட்டே இடத்தைத் தேர்வு செய்தார். காரணம் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க.வுக்கு எதிர் களமாய் அமைந்தது கோவை மாவட்டந்தான். ஆகவே கோவை மாவட்டத்தில் மாநாடு நடத்துவதன் மூலம் அங்கிருக்கும் வாக்குகளை சமன்செய்யலாம் என்ற சுயநலத்தோடுதான் அவர் அந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு உலகத் தமிழ் மாநாடு குறித்த சில தகவல்கள் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும். 1784ல் இந்திய ஆசிய ஆய்வுக்கழகம் கொல்கத்தாவில் தொடங்கியது. அக்கழகத்திற்கு வில்லியம்ஸ் ஜோன்ஸ் தலைவராக இருந்தார். 1933ஆம் ஆண்டு இந்திய கீழ்திசை ஆய்வுகள் மாநாடும் நடைபெற்றது. 1964ஆம் ஆண்டு பேராசிரியர் தனிநாயகம் அடிகள், வ.ஐ.சுப்ரமணியம் அவர்கள் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த ஒரு திட்ட வரைவை முன் வைத்தார்கள். இதனடிப்படையில் முதல் உலகத்தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1968ஆம் ஆண்டு 2வது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாதுரை இருந்தார். 3வது உலகத் தமிழ்மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.
4வது உலக தமிழ் மாநாடு ஒரு தேசிய இனவெறியின் அடையாளமாக அறிவுறுத்தும் வகையில் அமைந்தது. ஆம்! 1974ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள இனவெறி அரசால் 9 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஈழ விடுதலையின் நியாயத்தை உணர்ந்தவரும் புலிகளின் வீரத்தை தொலைநோக்கோடு அறிந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக அரியணையில் வீற்றிருந்தபோது சங்கத்தமிழ் வளர்த்த மதுரையிலே 1981ஆம் ஆண்டு 5வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. 6வது உலகத்தமிழ் மாநாடு 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடந்தது.  7வது உலகத் தமிழ் மாநாடு 1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொரீசியசில் நடைபெற்றது. ஈழத் தமிழ் அறிஞர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி தமிழின் உயர் நிலைக்கு இழிவு செய்த 8வது உலகத் தமிழ் மாநாடு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தஞ்சையிலே 1995ஆம் ஆண்டு சனவரி திங்கள் நடைபெற்று முடிந்தது.
உலகத் தமிழ் மாநாடு என்பது உலக தமிழ் உணர்வை மொழி மரபை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, கலை இலக்கிய ஆழத்தை அதன் வரலாற்று நிலையோடு உயர்த்தி பிடிக்கவும் இன்னும் ஒரு கோடி ஆண்டானாலும் தமிழினத்தின் அடையாளத்தை அதன் உயிர் காற்றான மொழியை கொஞ்சமும் சிறைவுறாமல் பேணிகாப்பதற்கும் அதற்கான திட்ட வரைவுகளை, ஆய்வுகளை, தமிழறிஞர்களைக் கொண்டு நிலைத் தன்மை அடையவும் நடைபெற வேண்டும். ஆனால், என்ன நடக்கப்போகிறது. தி.மு.க.வின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்போல் இச்செந்தமிழ் மாநாடு அமையப்போகிறது. கருணாநிதியை துதிபாடும் கவிஞர்களும், அறிஞர்களும் மட்டுமே இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட இருக்கிறார்கள். இல.கணேசன், இந்துராம், தினமணி வைத்தியநாதன் மற்றும் தினமலர் கூட்டம் போன்ற பச்சைத் தமிழர்களும் மேலும் இங்கு சிறப்பு அழைப்பாளர்கள். வரும் இவர்களெல்லாம் தமிழுக்கும் பதிலாக கருணாநிதியை துதிப்பாடப் போகிறார்கள். லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் தன் குடும்பத்திற்கு மந்திரி பதவி கேட்க டில்லிக்கு பயணம் செய்த கருணாநிதியை தாய்தமிழின் வரம் என்று வர்ணிக்கப்போகிறார்கள். முல்லைப் பெரியாறு, ஒகெனெக்கல், பாலாறு போன்ற தமிழ்நாட்டின் நீராதார தன்மைகளைவிட, தன் கட்சியினருக்கு மந்திரி பதவி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட கருணாநிதி நடுவண் அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்து வரும் துரோகங்களை கண்டிக்க துணிவில்லாமல் தம்மையும் தமது குடும்ப சொத்தையும் காப்பாற்றிக் கொள்ள நடுவண் அரசின் துரோகங்களை மயிலிறகு கொண்டு வருடும் கருணாநிதிதான் இந்த செம்மொழி மாநாட்டை நடத்தப்போகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாநாட்டிற்கான செலவுகளெல்லாம் எப்படி கிடைக்கப்போகிறது தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள சிறுவர்களைக்கூட குடிக்கு அடிமையாக்கி வீதிக்கு வீதி சாராயக் கடைகளைத் திறந்து ஆண்டிற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் என சாராயம் விற்ற பணத்தில் சம்பாதித்த லாபத்தில்தான் இந்த மாநாடு நடைபெற போகிறது.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து துரோகம் இழைக்கும் கருணாநிதியின் இச்செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தான் தமிழர் என்று யாரெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். முள்வேலி வதை முகாமில் அடைக்கப்பட்ட நம் தமிழர்களை, சொந்த உறவுகளை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பிய பின்னரே இப்படிப்பட்ட இம்மாநாட்டை நடத்த வேண்டுமென கருணாநிதிக்கு நாம் கோரிக்கை வைப்போம். தமிழன் பிணத்தின்மேல் நடத்தப்படும் மாநாட்டை புறக்கணிப்போம்.
 
-கண்மணி
 


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment