2010/1/17 jmms jmmsanthi@gmail.com
எடை அளவை வைத்த காரனமே அசிங்கமானது,கேவலமானது.
இது ராணுவம் , காவல்துறைக்கும் பொருந்துமா?..பொருந்தாது.காரணம் ஜொள்ளர்களின் கண்ணொட்டத்துக்கு தீனி போடும் அளவுகோல்களை வைத்து ராணூவத்துக்கும்,போலிசுக்கும் ஆள் எடுப்பதில்லை என்பதால்.
செல்வன் , சேவை வர்த்தகத்தில் இதை தவிர்க்க முடியாது..அதில் தவறுமில்லை... கோடி கணக்கில் கொட்டி தொழிற்சாலை ஆரம்பித்து லாபம் சம்பாதிக்கும் இடத்திலும் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண்ணை உட்கார வைப்பது கண்ணுக்கு குளிர்ச்சிதான்..
அதே பெண்ணை கூட்டி கொடுத்தால் முழு உடலுக்கும் குளிர்ச்சி.பணம் கிடைக்குமென்றால் அதையும் செய்ய கம்பனிகள் தயாராகத்தான் இருக்கும்.நீதிக்கும், நியாயத்துக்கும் புறம்பான முறையில் வரும் இத்தகைய வருமானத்தை அனுமதிக்க கூடாது.
அதே போல் சேல்ஸ் , மார்க்கெட்டிங்கில் உள்ளவர்கள் அழகாக தோற்றம் தருவது வியாபாரத்துக்கு ஒரு கேட்டலிஸ்ட்...
அழகு என்பது கவர்ச்சி அல்ல..
எடை அதிகமானவரை விட எடை குறைந்தவரை பார்ப்பது என்பது பல விதத்தில் வாடிக்கையாளரை ஈர்க்கலாம். உதரணமாக எடை கட்டுப்பாடு கொண்டவர்களை காணும்போது மிக நேர்த்தியாகவும் , ஒருவித ஒழுக்கமாகவுமே தோன்றலாம்... தவறில்லை....வாடிக்கையாளரை எந்த விதத்தில் ஈர்க்கிறீர்கள் என்பதுதான் பிரச்சனை.நேர்மையான முறையில் டிஸ்க்ரிமினேட் செய்யாமல் வேலைக்கு ஆள் எடுங்கள்.அதுதான் நியாயம்.எடை அதிகமானவர்களுக்கும், எடை குறைந்தவர்களுக்கும் இந்த காமவெறி கண்ணோஒட்டத்தை விட்டு வேறு எந்த வித்தியாசமும் வாடிக்கையாளர் சேவையில் கிடையாது
சேவை வர்த்தகத்தை தவிர்த்து வேறு வேலைகளே இல்லையா?..
எடை அதிகமானோர், அழகற்றோர் கூட அறிவால் மற்ற திறமையால் எங்கேயோ மிகப்பெரிய நிலைமைக்கு போய்விடுவதுண்டே..இப்ப வேலையில் சேர்ந்தவர்களை அதை விட்டு தூக்கியதுதானே பிரச்சனை?ஏற்கனவே பார்க்கும் வேலையை பத்துகிலோ எடை அதிகரிப்பால் இந்த பெண்கள் இழக்கவேண்டும் என்பது எத்தனை கேவலமான,அசிங்கமான விஷாய்ம்?அழகு தேவைப்படும் இடத்தில் அழகு இருந்துவிட்டு போகட்டும்..தப்பில்லை...
இது அழகு தேவைபடும் தொழிலுமல்ல,இடமுமல்ல.இது சேவைதொழில்.
ஒரு அழகான பெண், , ஒரு அழகற்ற பெண் , இருவரும் சம படிப்பில் அந்தஸ்தில் என்றால் திருமணத்துக்கு யாரை தேர்ந்தெடுப்போம்?..
சில விஷயங்களை ஏற்றுத்தான் ஆகணும்..
இதுவும் Life for the fittest என்பது போலத்தான்...
திருமணத்துக்கு இங்கே ஆள் எடுக்கவில்லை.வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்.திருமணமும், வேலையும் ஒன்றல்ல.அழகற்றவர்கள் , ஊனமுற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை வெறுத்தா விடுவார்கள்.. அவர்களுக்கும் நம்பிக்கை தரக்கூடிய வாழ்க்கை உண்டு , மனிதர்கள் உண்டு...
வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை அடைந்ததுமே மனித மனம் திருப்தியடைந்து அடுத்தவருக்கு உதவுவதை எண்ண ஆரம்பித்துவிடும்...இருக்கும் வேலையை இழந்தவர்களுக்கு தத்துவங்கள் பலனளிக்காது.அவர்களுக்கு தேவை நீதி,நியாயம்.
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
No comments:
Post a Comment