Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] Re: இந்தியா உலக அளவில் ஜாம்பவனாக மாறப்போகும் காலம்


சீனா வெகு வேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருது. இருப்பினும் அமெரிக்காவை விஞ்ச பல பதினாண்டுகள் ஆகும். காரணம் உலகின் தலை சிறந்த பல்கலைகள் 100 கணக்கு எடுத்தால் அதில் 50 க்கும் மேல் அமெரிககவிலேயே இருக்கும், அமெரிக்கா ஆராய்ச்சிக்கு செலவிடும் பணம் மிக மிக அதிகம்
 
இந்த இரண்டு துறைகளிலும்  நம் நாடும் பலபடிகள் பின்தங்கியுள்ளோம்
 
சீனாவை விட நாம் ஜனநாயகத்தில் முன்னேறியுள்ளோம். தொழில் முனைவோரும் அதிகம்.
ஜனநாயகத்துக்கு தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் தன்மை உடையது
சீனாவில் மேல் மட்டம் உணரவேண்டும். அதுக்கு தன்மானம் இடம் கொடுக்காது
 
சீனாவை போலனறி இந்திய பொருளாதாரம் உள்நாட்டு சந்தையையே (மென்கலன் தவிர) பெரிதும் நம்பி உள்ளது. அதுவும் ஒரு பலம்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment