4-1-10 அன்று, சீதாலட்சுமி <seethaalakshmi@gmail.com> எழுதினார்:
--
இப்பொழுது என்ன நடக்கின்றது?. வேலைக்கு வேண்டிய முக்கியமான தகுதி,
காசும், சிபாரிசுகளும். திறமையானவர்கள் ஒதுக்கப்பட்டால் நாட்டின்
வளர்ச்சி எந்த அளவு பாதிக்கபடும் என்று வருங்கால சந்ததிகள் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். அறுவை சிகிச்சையின் பொழுது கத்திகூடச் சரியாகப்
பிடிக்கத் தெரியாதவனுக்கு, சிபாரிசால் வெற்றி கொடுத்தால் மனித
உயிர்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? உதரணத்திற்காக இன்னொன்றும்
கூற விரும்புகின்றேன்.சில காரணங்களால் சில சலுகைகள் தருகின்றோம்..
அதிலும் தேர்ந்தெடுக்க குறைந்தது 70 மதிப்பெண் பெற வேண்டுமென்று ஓர் நடு
நிலை நிர்ணயம் செய்தால்அந்த மதிப்பெண் பெற முயற்சிப்பான். அதைவிடுத்து
40 மதிப்பெண் போதும் என்று சிபாரிசு செய்தால் அவனுக்கும் படிப்பில்
அக்கறை ஏற்படாது. எதிர்காலத்தில் கல்வித்தரம் உயர அக்காலத்திற்கேற்ப பல
கோணங்களில் சிந்தித்து செயல் படவேண்டும்.
உண்மை
திறமை இருந்தாலும் சிபாரிசு இல்லேனா எங்கே வேலை கிட்டாமல் போய் விடுமோனு எல்லோருக்கும் அச்சம் வருகிறதும் உண்மை'
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment