Thursday, January 7, 2010

[தமிழமுதம்] அமெரிக்க அரசு உயர் அதிகாரியாக அரவாணி நியமனம் : ஒபாமா அதிரடி

http://www.tamilvanan.com/

அமெரிக்க அரசு உயர் அதிகாரியாக அரவாணி நியமனம் :  ஒபாமா அதிரடி



amanda-simpson.jpg

மெரிக்காவில் முதல்முறையாக அரசு உயரதிகாரியாக அரவாணி ஒருவரை அதிபர் ஒபாமா நியமித்தார்.

அமெரிக்க அரசின் வர்த்தக துறையில் தொழில்நுட்ப ஆலோசகராக அமண்டா சிம்சன் என்கிற அரவாணியை நியமித்து  அமெரிக்க வரலாற்றில் புதுப் பாதை அமைத்துள்ளார் அதிபர் ஒபாமா. 49 வயதான அமெண்டா சிம்சன் ஆணாக இருந்து பெண்ணாக 1990 ஆம் ஆண்டில் தன்னை மாற்றிக் கொண்டார். அவருக்கு முன்னாள் துணையின் உறவால் பிறந்த 13 வயது மகன் இருக்கிறான்.
அரிசோனா மாநிலத்தில் ரைத்தான் என்ற பகுதியில் இருக்கும் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவர் சிம்சன்.

அரசு உயரதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து அமெண்டா சிம்சன் கூறுகையில், “இந்த பணி கிடைத்ததில் பெருமை அடைகிறேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி பெருமித மடைகிறேன். என் முன்னால் இருக்கும் சவால்களை சமாளிக்க ஆர்வத்துடன் உழைப்பேன்” என்கிறார்.

“அமெரிக்க வரலாற்றில் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் அரவாணியான நான்
என்னைப் போல பல அரவாணிகளை அரசுத் துறைக்கு கொண்டுவர முயற்சி எடுப்பேன். என்னுடைய பணி நியமனத்தால் என்னைப் போன்ற பலருக்கும் புது நம்பிக்கைப் பிறக்கும் என நம்புகிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.



--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

No comments:

Post a Comment