அன்பின் நண்பர்களுக்கு,
ஓர் மகிழ்வான செய்தி. குழந்தை இலக்கியத்திற்கான என் பங்களிப்பின் முதல் முயற்சியாக "காலப் பயணிகள் /ஒரெ ஒரு ஊரிலே" என்ற தலைப்பில் இரண்டு சிறுவர் நாவல் ஒரே புத்தகமாக வெளிவருகின்றது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகின்றனர். திரிசக்தி, தேவதை, தமிழக அரசியல் என்ற மூன்று இதழ்களை வெளிக்கொண்டு வரும் திரிசக்தி நிறுவனம் முதல் முயற்சியாக இருபது புத்தகங்களை வெளியிடுகின்றனர். வெங்கட்சுவாமிநாதன், இரமணன், ஹரிகிருஷ்ணன், வீரராகவன், காதம்பரி, மரபின் மைந்தர் முத்தையா, நிலாரசிகன் போன்றோருடைய புத்தகங்கள் இதில் அடங்கும்.
சென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில், டிசம்பர் 20ஆம் தேதி மாலை 6.00 மணி வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. என்னுடைய புத்தகத்தை எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகின்றார். ஒரு குழந்தை நட்சத்திரம் புத்தகத்தை பெற்றுக்கொள்வார்.
நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]நூல் விபரம்:
பெயர்: காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
பகுப்பு : சிறுவர் நாவல்
பக்கம் : 122
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
கிடைக்குமிடம் : டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.மேலும்,
என் ஆத்ம நண்பன் நிலா(நிலாரசிகன்)வின் சிறுகதை தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் என்கின்ற புத்தகமும் இதே மேடையில் வெளியாகின்றது. இது என் மகிழ்வினை இரட்டிக்கின்றது.
அனைவரும் தவறாது வந்து கலந்துகொண்டு (அனைத்து புத்தகங்களையும் வாங்கி :) ) விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
விழியன்
--
விழியன்
http://vizhiyan.wordpress.com
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment