Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்க்கலாமா ?

நல்லது.  ஏற்கனவே திருக்குறளில் மேலாண்மைக் கொள்கைகள் பற்றிச் சில நூல்கள் வந்துள்ளன.
 
திருக்குறள், அர்த்தசாத்திரம், மனுநீதி, சன் சூவின் போர்க்கலை இவற்றை மேலாண்மைக் கல்லூரிகளில் படிப்பது நல்லது.
 
இன்றைய மேலாளர்கள் அன்றைய அரசர், அமைச்சர்களைப் போன்றவர்கள்.  அந்த நூல்களின் நல்லது கெட்டதுகளைக் கற்றுக் கொள்வதும் அவற்றின் கொள்கைகளைப் படித்து அலசுவதும் நல்லது. 
--
அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலிஃபோர்னியா
http://kural.blogspot.com

 
2009/12/17 காமேஷ் <kameshcn@gmail.com>

பெங்களூரு:பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்லூரியில், பகவத் கீதை பாடத்தை போதிக்க திட்டமிடப் பட்டுள்ளது.பெங்களூரில் இந்திய மேலாண்மை கல்லூரியில் (ஐ.ஐ. எம்.பி.,) வர்த்தக மேலாண்மையும், பண்டைய அறிவு சார்ந்த மாற்று முறையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஐ.ஐ.எம்.பி., தலைவரும், பேராசிரியருமான மகாதேவா குறிப்பிடுகையில், "மேலாண்மை படிப்புக்கு தேவையான விஷயங்கள், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது.



எனவே, மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்ப் பது குறித்து வல்லுனர்களின் கருத்தை கேட்டுள் ளோம்.பகவத் கீதையில் எந்தெந்த பகுதியை பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவித்த பின், பகவத்கீதையை பாடமாக போதிக்க திட்டமிட்டுள்ளோம்'என்றார்."பல நூறு ஆண்டுகளுக்கு முன், பகவத் கீதையில் கூறப் பட்ட விஷயம் இன் றைய மேலாண்மை நிர்வாகத்துக்கும் பொருந்தும் படியாக உள்ளது. எனவே, பகவத் கீதையை பாடதிட்டத்தில் சேர்க்கலாம் என, இந்த கருத்தரங்கில் பேசிய பலரும் வற்புறுத்தினர்


http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19872

~காமேஷ்~


மதம் சார்ந்த புத்தகங்களிலிருக்கும் கருத்துக்களை பாடத்தில் சேர்த்தால் பிரச்சனைகள் வருமே ?

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment