வண்ணப் பவள மருங்கினிற் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப,
நண்ணித் தொழுவர் சிந்தை பிரியாத
நாராய ணா!இங்கே வாராய்,
எண்ணற் கரிய பிரானே! திரியை
எரியாமே காதுக் கிடுவன்,
கண்ணுக்கு நன்று மழுகு முடைய
கனகக் கட்ப்பு மிவையா.
என பிரபந்தத்திலே பெரியாழ்வார் சாத்தி என உரைப்பது ஜப்பார் அவர்கள் பிறப்பதற்கு முன்பே இருக்கு
பொய்கையாழ்வார் பாசுரத்திலிருந்தும் தருகிறேன்
அவரவர் தாம்தாம் அறிந்தவாரேத்தி
இவர் இவர் என் பெருமான் என்று - சுவர்மிசை
சாத்தியும் வைத்தும தொழுவார் உலகளந்த
மூர்த்தி உருவே முதல்
சாத்தி என்பது ஜப்பார் அவர்கள் பிறப்பதற்கு முன்பே ஆழ்வார்களாலும் கையாளப்பட்ட சொல்..
நபெ
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment