Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] Re: [அன்புடன்] Re: புகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்

 
சாதிக் அலி கூறுவதில் எனக்கு முழு உடன்பாடு
தயவு செய்து நடந்ததை எல்லோரும் மறப்போம். யாரும் யாரிடமும் மன்னிப்பு
கேட்கவேண்டாம். மறப்போம் . முடியாவிடில் மன்னிப்போம்
அதுவும் முடியாவிடில் கொஞ்ச நாட்கள் மனம் சமாதானமாகும் வரை ஒதுங்கி இருப்போம்.
இது தொடர்கதையாகி இருப்பவரையும் ஏன் வேதனைப் படுத்த வேண்டும்
எலோரிடமும் இந்த வேண்டுகோளை வைக்கின்றேன்
வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள்
மன உளைச்சலிலிருந்து சில நிமிடங்கள் ஒதுங்க வரும் இடத்தில் கசப்பு வேண்டாம்
எல்லோரையும் நான் வேண்டிக் கொள்கின்றேன்
மன்னிப்புதான் ம்உக்கியமென்றால் எல்லோர் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்கின்றேன்
குழந்தைகள் விளையாட்டு போதும்
சீதாம்மா

2009/12/21 சாதிக் அலி <sadeekali@gmail.com>
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் 
மிகைநடி மிக்கக்கொளல்.

என்னங்க இங்க எதுக்கெடுத்தாலும் மன்னிப்பு, பொது மன்னிப்பு என்று மிரட்டுகிறார்கள். இங்கே நடப்பது அரட்டை. அது ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். 

யாராவது டிராக் மாறி பயணித்தால் உடன் பயணிக்கும் யாரும் அந்த எல்லை மீறுவதை சுட்டிக் காட்டுங்கள் போதும். 

மிக மோசமாக ஒருவர் உரையாடினால் அவரை குழுமத்திலிருந்து நீக்கலாம் அல்லது நாங்கள் இவ்விழையை புறக்கணிக்கிறோம் என்ற ஒற்றைச் சொல்லில் எல்லோரும் அவ்விழைக்கு மூடுவிழா நடத்தி விட்டு வெளிநடப்பு செய்யலாம். 

மன்னிப்பு என்னங்க. அவர் மன்னிப்பு கேட்கனும் இவர் மன்னிப்பு கேட்கனும் என்று சொல்பவர்களே எத்தனையோ இழைகளில் அத்துமீறி வரம்புமீறி விமர்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன். 

பொதுவாக எல்லோரும் இங்கே ஓரளவு படித்த நாகரீகமுள்ளவர்கள் தாம். இன்னொருவர் மனம் புண் படாதவாறு உரையாடுதல் அவசியம். 

தனிப்பட்ட முறையில் யாரையும் இகழ யாருக்கும் உரிமையில்லை. மற்றவர் மதத்தை, கொள்கையை கேவலப்படுத்தாமல் பழகனும், இது மிகவும் அவசியம்.

மன்னிப்பு எல்லாம் யாரும் யாருக்கும் கேட்க வேண்டாம். அது நம்மிடையே உள்ள அன்னியோன்யத்தை கெடுத்துவிடும்.

ஒரு குடும்பத்தை வேறறுத்த ஒரு கொலையாளிக்குக் கூட மரணதண்டனை கொடுக்கக் கூடாது. அவனுக்கு திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று இரக்க சிந்தனையில் வாதாடும் மிக்கப் பண்பில் மிகைத்த எனதன்பு சகோதர் சகொதரிகள் இவ்வளவு கோபம் மிகைக்க வேண்டியது அவசியம் தானா? 

தவறுதல் என்பது மனித இயல்பு. நம்முடைய எந்தப் பேச்சு அப்படி எதிர்மறையான கருத்து வரக்காரணமாக அமைந்ததை அலசி இனி அது போல் நிகழாமல் நம் தரப்பை நாம் சீர் செய்வோம்.

பெரியவர்களிடம் மன்னிப்பைக் கேட்டு வாங்குதல் நல்ல பண்பல்ல. உதாரணத்திற்கு நமது அம்மா, அப்பா ஒருவேளை தவறாக பேசிவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று வம்பாக கேட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள் என்றால் அதற்குப் பின் உறவு சீராக, நலமாக இருக்குமா? அப்படி அவர்கள் மன்னிப்புக் கேட்பது நமக்கும் கேவலமில்லையா?

நன்றல்லது அன்றே மறப்பது நன்று... இதைத் தான் வள்ளுவர் கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார்.

சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் வேலையைச் செய்கிறார்கள். அவர்களும் மெத்தப் படித்த மேதைகள் எனும் போது மிக வருத்தமாயிருக்கிறது. எல்லோரும் நடந்ததை பூரணமாக மறந்து விட்டு எப்போதும் போல கலகலப்பாக அதே சமயம் இனியாவது பிறர் மனம் புண்படாதவாறு கண்ணியமாக உரையாடுவோம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

         sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment