Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1



22 டிசம்பர், 2009 8:09 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
மழைக்காலத்து தொந்தரவுகளில் சளி, இருமல் ஜூரம் தவிர்க்க இயலாததாகிறது

இல்லாள் பொதுவில் மருத்துவரிடம் வருவதற்கும், மருந்து மாத்திரைகள் உட்கொள்வதனையும் விரும்புவதில்லை.. ஆயினும் ஜூர அளவு அதிகமாகி தொந்தரவு நிலை பொறுக்கும் எல்லைக்கும் அதிகமாகும் நிலையில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொல்வாள்

சமீபத்தில் அப்படி ஒரு சந்தர்ப்பம்..

மருத்துவர் அழைக்கக் காத்திருந்த சமயம்.. பெண் மருத்துவர் -- பொது மருத்துவர்அவரது கணவர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் . காத்திருப்போரில் அதிகம் குழந்தைகள். அக்குழந்தைகளின் பெற்றோர்..

ஒரு குழந்தை மிக குரல் தந்து அழுத வண்ணமிருந்தது.. அதெற்கென்ன நோவோ
அதனைச் சமாதானம் செய்ய அதன் தாயும் தந்தையும் முயன்ற வண்ணமிருந்தனர்.. தாய் அதனை மெல்லத் தட்டிக் கொடுப்பதும்.. குழந்தை சமாதானம் ஆவதும்.. அந்த தகப்பன் அந்தக் குழந்தைக்கு முத்தமிடுவதும் உடனே அந்தக் குழந்தை அழத் தொடங்குவதுமாக நிமிடங்கள் கரைந்தன

தந்தையானவன் முகச்சவரம் செய்து நாலைந்து நாட்கள் ஆகியிருக்கும்.. அவனது தாடி மயிரானது முள் போல் குத்துகிறது.

இன்னும் இரண்டு நாள் மழிக்காமல் விட்டால், கிச்சுகிச்சு மூட்டும்


மொட்டை அடிச்சு ஒரு பத்து நாள் ஆச்சுனா உடன்-மாணவர்களை வெல்வெட் தலையா நு தடவி பார்த்த காலமும் உண்டே
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment